என் மலர்
புதுச்சேரி

திருக்கனூர் தீயணைப்பு நிலையத்திற்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட காட்சி
திருக்கனூர் தீயணைப்பு நிலையத்தில் அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் ஆய்வு
- இயங்காத டெலிபோன் உடனடியாக செயல்பட நடவடிக்கை
- அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் இன்று காலை திருக்கனூர் தீயணை ப்பு நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
திருக்கனூரில் தீயணைப்பு நிலையத்தில் கடந்த 3 நாட்களாக டெலிபோன் இயங்க வில்லை.
இதுகுறித்து மலரில் செய்தியாக வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் இன்று காலை திருக்கனூர் தீயணை ப்பு நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் டெலிபோன் இயங்காதது குறித்து விசாரித்தார்.
அதற்கு சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்படுவதால், தொலைபேசி ஒயர் துண்டாகி விட்டதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் அங்குள்ள ஊழியர்களின் குடியிரு ப்பினை பார்வையிட்டு தீயணைப்பு வீரர்களின் குறைகளையும் கேட்ட றிந்தார். இதற்கிடையே திருக்கனூர் தீயணைப்பு நிலைய டெலிபோன் சரி செய்யப்பட்டு தற்பொழுது மீண்டும் இயங்கத்தொடங்கி உள்ளது.






