என் மலர்tooltip icon

    உண்மை எது

    உத்தர பிரதேச மாநிலத்தின் பரப்புரை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வழக்கமான கட்சிகளுடன் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறது.

     வைரல் புகைப்படம்

    இந்த நிலையில், பெரும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் எடுக்கப்பட்டது என்றும் ஒவைசி கூட்டத்தில் பங்கேற்க இந்த கூட்டத்தினர் ஒன்று கூடியதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2019 ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் 2019 முதல் இணையத்தில் வலம்வந்து கொண்டு இருக்கிறது. இதே புகைப்படம் மும்பையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி கடந்த ஆண்டும் வைரலானது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    டெல்டா வைரஸ் பற்றி பீதியை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இந்தியாவில் உருவான டெல்டா வைரஸ் தற்போது உலகின் நூற்றுக்கும் அதிக நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் கணித்துள்ளது. பிரிட்டனில் 90 சதவீத கொரோனா நோயாளிகள் டெல்டா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    அறிவியல் ரீதியாக டெல்டா வைரஸ் B.1.617.2 என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் முந்தைய ஆல்பா வேரியண்டை விட 40 முதல் 50 சதவீதம் வேகமாக பரவக்கூடியது ஆகும். இந்த வைரஸ் குறித்த இதர விவரங்களை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், டெல்டா வேரியண்ட் ஏற்படுத்தும் அறிகுறிகள், அதன் தீவிரத்தன்மை குறித்து பீதியை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

     கோப்புப்படம்

    அதன்படி 'டெல்டா வைரஸ் ஏற்பட்டால் இருமல், காய்ச்சல் எதுவும் ஏற்படாது. ஆனால் மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, முதுகுவலி, சோர்வாக உணர்தல் போன்றவை ஏற்படும்.  இத்துடன் ஸ்வாப் பரிசோதனையிலும் இந்த வைரஸ் இருப்பதை கண்டறிய முடியாது,' என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    உண்மையில் டெல்டா தொற்று ஏற்பட்டால் தொடர்ச்சியான இருமல், தலைவலி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறண்டு போவது உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். பிரிட்டனில் டெல்டா தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தொண்டை வறண்டு போவது, மூக்கடைப்பு, சைனஸ் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு இருக்கிறது.

    டெல்டா தொற்று மற்ற வைரஸ்களை விட 50 சதவீதம் வேகமாக பரவும் என்பது உண்மை தான். ஆனால் மற்ற தொற்றுகளுக்கு பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை செய்தாலே, டெல்டா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    வைரல் புகைப்படம் அங்கு எடுக்கப்பட்டது தான், ஆனால் இது சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை என தெரியவந்துள்ளது.
     

    வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட சாலையில் கார்கள் மிதக்கும் காட்சி அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க. தலைவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த புகைப்படம் நாக்பூர் கார்ப்பரேஷன் பகுதியில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இப்பகுதி பா.ஜ.க. நிர்வாகத்தின் கீழ் இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நாக்பூர் நகராட்சியில் பா.ஜ.க. நிர்வாகம் மோசமாக உள்ளது என கூறி அப்பகுதியை சேர்ந்த சிவ சேனா தலைவர் வைரல் புகைப்படத்தை ட்வீட் செய்து இருக்கிறார். 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, அது 2018 ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் தகவல்களில் உள்ளது போன்று அப்போதும் நாக்பூர், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. மேலும் இந்த புகைப்படங்கள் நாக்பூர் நகராட்சியில் எடுக்கப்பட்டவையே. எனினும், இவை சமீபத்தில் எடுக்கப்படவில்லை.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    உலகின் நம்பத்தகுந்த தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்தி இடம்பிடித்து இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    உலகளவில் மிகவும் நம்பத்தகுந்த தலைவர்களில் ராகுல் காந்தி மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக கூறும் பி.பி.சி. செய்தி குறிப்பு, ஸ்கிரீன்ஷாட் வடிவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகளாவிய கருத்துக் கணிப்பில் இந்த முடிவுகள் வெளியானதாக வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பி.பி.சி. செய்தி குறிப்புடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியின் புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் தலைப்பில் உலகளவில் நம்பத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்தி மூன்றாவது இடம் பிடித்துள்ளார் என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், நம்பத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக கூறும் தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் வைரல் தகவல் போலியான ஒன்று என்பதை விளக்கும் செய்தி குறிப்புகள் கிடைத்துள்ளன. இதே தகவல் 2016 முதல் இணையத்தில் வலம் வருகின்றன.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    மனித கண் க்ளோஸ்-அப் முறையில் இப்படித் தான் இருக்கும் என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    மனித கண் போன்றே காட்சியளிக்கும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட மனித கண் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் படம் இஸ்லாம் கடவுளை போற்றும் தலைப்புடன் பகிரப்பட்டு வருகிறது.

    வைரல் படத்தை இணையத்தில் தேடிய போது, அது மனித கண் இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இது கணினியில் உருவாக்கப்பட்ட ஓவியம் ஆகும். இதனை போலாந்தை சேர்ந்த வரைகலை நிபுணர் யூஜின் பிலிமோனோவ் கற்பனையில் வரைந்த ஓவியம் ஆகும்.

     இன்ஸ்டா பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இணைய தேடல்களில் இந்த படத்துடன் மேலும் இரு படங்கள் கிடைத்தன. இவற்றை லண்டனை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதே படத்தை பிலிமோனோவ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    இருநாடுகளை சேர்ந்த பெண்கள் கூடைபந்து அணி வீரர்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்க பெண்கள் கூடைபந்து அணிக்கு எதிரே மற்றொரு பெண்கள் கூடைபந்து அணியினர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு அணி வீரர்களின் உயரம் குறித்த பாகுபாடை எடுத்துக் கூறி புகைப்படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    புகைப்படத்தில் உயரமான வீரர்கள் உடையில் அமெரிக்க நாட்டின் பெயரை குறிக்கும் யு.எஸ்.ஏ. எழுத்துக்கள் மற்றும் கொடி இடம்பெற்று இருக்கிறது. மற்றொரு நாட்டு வீரர்களின் சீருடையில் இருக்கும் பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவர்களின் சீருடை நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்டுள்ளது. 

     வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தில் நீலம் மற்றும் வெள்ளை நிற சீருடை அணிந்திருப்பவர்கள் இந்திய பெண்கள் கூடைபந்து யு-16 அணியினர் என சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்து வருகின்றனர். “USA under 16 years old vs India under 16 years old,” எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த இணைய தேடல்களில் நீலம் மற்றும் வெள்ளை நிற சீருடையில் இருப்பது எல் சால்வடார் அணி வீரர்கள் என தெரியவந்தது. மேலும் இந்த புகைப்படம் சிலி நாட்டில் 2019 ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கைகளை பாராட்டும் தகவல் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரபல ஊடக நிறுவனமான நியூ யார்க் டைம்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. நியூ யார்க் டைம்ஸ் மூத்த செய்தி ஆசிரியர் ஜோசப் ஹோப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கைகளை பாராட்டி இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், 'ஜோசப் ஹோப், நியூ யார்க் டைம்ஸ் மூத்த செய்தி ஆசிரியர்: நரேந்திர மோடியின் ஒற்றை குறிக்கோள் இந்தியாவை சிறப்பான நாடாக மாற்றுவது தான். எதிர்காலத்தில் இவரை தடுக்காமல் இருந்தால் இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக உருவாகும்,' என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஜோசப் ஹோப் என்ற பெயர் கொண்ட யாரும் அந்த நிறுவனத்தில் பணியாற்றவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் நியூ யார்க் டைம்ஸ் தகவல் பரிமாற்ற பிரிவு இயக்குனர் நிகோல் டெய்லர் வைரல் தகவலில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பது மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. சமூக செயற்பாட்டாளரான இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வந்தார். 84 வயதான இவர் 2020 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இடையில் ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஜூலை 5 ஆம் தேதி மதியம் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், வயதான முதியவரின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    மேலும் வைரல் புகைப்படத்தில் இருப்பது பாதிரியார் ஸ்டேன் சுவாமி என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் புகைப்படத்தில் இருப்பது பாதிரியார் ஸ்டேன் சுவாமி இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது கொலை குற்றவாளியான பாபுராம் பல்வான் சிங் ஆகும். இவர் உத்திர பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க இருப்பதாக கூறும் தகவல் குறித்து மத்திய அரசு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


    கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 4 ஆயிரம் வழங்குவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் தகவலை தொடர்ந்து மத்திய அரசு நிறுவனமான பி.ஐ.பி. இந்த தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவலில், 'மத்திய அரசு கொரோனா நிவாரண நிதி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்க இருக்கிறது,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. மத்திய அரசு இதுபோன்று எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

     பிரதமர் மோடி

    மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதி என கூறி வைரலாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். முன்னதாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவாமல் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவிக்க இருப்பதாக கூறும் தகவல் வைரலானது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிகளவு தளர்வுகளால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவிக்கப் போவதாக வைரல் வீடியோக்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     கோப்புப்படம்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை இதுவரை அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இவை ஜூன் 30 ஆம் தேதி முதல் இணையத்தில் வலம் வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. வீடியோவினை இணைய விஷமிகள் எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    இந்திய குடியரசு தலைவரின் மாதாந்திர சம்பளம் ரூ. 5 லட்சம் ஆகும். இத்துடன் குடியரசு தலைவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தான் ஈட்டும் ரூ. 5 லட்சம் மாத வருவாயில் ரூ. 2.75 லட்சத்தை வரியாக செலுத்துவதாக தெரிவித்தார். கூட்டத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்க, `எனது மாத சம்பளம் கவர்ச்சிகரமானதாக தோன்றும், ஆனால் மாத சம்பளத்தில் ஒருபகுதியை வரியாக செலுத்துகிறேன்,' என அவர் தெரிவித்தார்.

    குடியரசு தலைவர் மாத வருவாயில் இத்தனை லட்சங்களை வரியாக செலுத்துகிறாரா? என இணையத்தில் தேடிய போது, குடியரசு தலைவர் மாத சம்பளத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. குடியரசு தலைவரின் மாத வருவாய் விவரங்கள் இணையத்தில் இல்லை.

    வலைதள ஸ்கிரீன்ஷாட்

    பென்சன் சட்டம் 1951 படி குடியரசு தலைவரின் மாத வருவாய் ரூ. 5 லட்சம் ஆகும். எனினும், இந்த சட்டத்தில் குடியரசு தலைவரின் மாத வருவாய்க்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிடப்படவில்லை. சட்டப்படி குடியரசு தலைவருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    சமீபத்திய போராட்டத்தின் போது போலீசாரின் உண்மை முகம் வெளிப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    இந்தியாவில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஜூன் 26 ஆம் தேதி ராஜ் பவனை நோக்கி செல்ல முயன்றனர். இந்த சம்பவத்தின் போது விவசாயிகள் மற்றும் சண்டிகர் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. விவசாயிகளை தடுக்க போலீசார் தண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். 

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகளவு வலம்வரத்துவங்கின. சிலர் கடுமையான கருத்துக்களுடன் புகைப்படங்களையும் இணைத்து பதிவுகளை வெளியிட்டனர். அப்படியாக இந்த போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி, ஆறு பெண் காவலர்கள் மூதாட்டி ஒருவரை வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் ஆகஸ்ட் 2015 மாதத்தில் பஞ்சாபின் பாட்டியாலா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கும் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதே தகவலை உறுதிப்படுத்தும் செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    ×