search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    வெள்ளத்தில் மிதக்கும் கார்கள் - வைரல் புகைப்படங்களின் உண்மை பின்னணி

    வைரல் புகைப்படம் அங்கு எடுக்கப்பட்டது தான், ஆனால் இது சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை என தெரியவந்துள்ளது.
     

    வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட சாலையில் கார்கள் மிதக்கும் காட்சி அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க. தலைவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த புகைப்படம் நாக்பூர் கார்ப்பரேஷன் பகுதியில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இப்பகுதி பா.ஜ.க. நிர்வாகத்தின் கீழ் இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நாக்பூர் நகராட்சியில் பா.ஜ.க. நிர்வாகம் மோசமாக உள்ளது என கூறி அப்பகுதியை சேர்ந்த சிவ சேனா தலைவர் வைரல் புகைப்படத்தை ட்வீட் செய்து இருக்கிறார். 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, அது 2018 ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் தகவல்களில் உள்ளது போன்று அப்போதும் நாக்பூர், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. மேலும் இந்த புகைப்படங்கள் நாக்பூர் நகராட்சியில் எடுக்கப்பட்டவையே. எனினும், இவை சமீபத்தில் எடுக்கப்படவில்லை.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×