search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியை பாராட்டும் வைரல் கட்டுரை - உண்மை பின்னணி

    பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கைகளை பாராட்டும் தகவல் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரபல ஊடக நிறுவனமான நியூ யார்க் டைம்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. நியூ யார்க் டைம்ஸ் மூத்த செய்தி ஆசிரியர் ஜோசப் ஹோப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கைகளை பாராட்டி இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், 'ஜோசப் ஹோப், நியூ யார்க் டைம்ஸ் மூத்த செய்தி ஆசிரியர்: நரேந்திர மோடியின் ஒற்றை குறிக்கோள் இந்தியாவை சிறப்பான நாடாக மாற்றுவது தான். எதிர்காலத்தில் இவரை தடுக்காமல் இருந்தால் இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக உருவாகும்,' என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஜோசப் ஹோப் என்ற பெயர் கொண்ட யாரும் அந்த நிறுவனத்தில் பணியாற்றவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் நியூ யார்க் டைம்ஸ் தகவல் பரிமாற்ற பிரிவு இயக்குனர் நிகோல் டெய்லர் வைரல் தகவலில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×