என் மலர்
தேர்தல் செய்திகள்





திருவனந்தபுரம்:
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.பி. அப்துல்லா குட்டி. இவர், கடந்த 1999 முதல் 2004 வரை கண்ணூர் தொகுதி எம்.பி. யாக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்துல்லா குட்டி, பாரதீய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடி யையும் அடிக்கடி பாராட்டி வந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே காரணம்.
காந்திய கொள்கைகளை முன் எடுத்து செல்வதுதான் மோடியின் வெற்றி ரகசியம். மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உஜ்வாலா திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டமும் மக்களின் பாராட்டை பெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா யாரும் எதிர் பார்க்காத வெற்றியை பெற்றது. இதனை எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியில் உள்ளவர்களே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
இவ்வாறு பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியை பாராட்டியதும், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதும் கேரள காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக அவர்கள் மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் இதனை கொண்டு சென்றனர். இதையடுத்து கட்சி மேலிடம் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மோடியை புகழ்ந்ததால் இப்போது சிக்கலில் சிக்கி உள்ள அப்துல்லா குட்டி ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை பாராட்டி பேசினார்.
இதற்காக கடந்த 2009-ம் ஆண்டே அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது இங்கும் அதே சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
நெல்லை:
வசந்தகுமார் எம்.பி. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 3 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளேன். மேலும் தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்புகள், தொகுதிக்கு தேவையானவற்றை தொடர்ந்து செய்து கொடுப்பேன்.
கன்னியாகுமரி தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசும்போது, நாங்குநேரி தொகுதி மக்களின் பிரச்சினை குறித்தும் குரல் கொடுப்போம். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். குமரி மற்றும் நெல்லையை சிறந்த சுற்றுலா தலமாக்க முயற்சி மேற்கொள்வேன். குமரி மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது.
இதுகுறித்து மீனவர்களிடமும், தமிழக அரசிடமும் பேசி முடிவு செய்யப்படும். கடல் அரிப்பை தடுக்க கூடுதல் தூண்டில் வளைவு அமைக்கப்படும். எனது எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மீனவர் நலனுக்காக ஒதுக்கப்படும். செயல்படாமல் உள்ள நாங்குநேரி சிறப்பு பொருளாதார திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன். ரூ.150 கோடியில் பாளையில் விளையாட்டு கிராமம் அமைக்கும் திட்டம் காலதாமதம் ஆகிறது. இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இரட்டை ரெயில் பாதை பணிகளை துரிதப்படுத்துவேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை செய்து விட்டு தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன். நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். எனினும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள். குமரி தொகுதியில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஓட்டுகள் விடுபட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆனாலும் நாங்கள் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம். மக்களின் குரலாக பாராளு மன்றத்தில் ஒலிப்போம். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்தவர் குமரி அனந்தன். குமரி மாவட்ட ரெயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். அல்லது நெல்லையை தனி கோட்டமாக்கி அதனுடன் இணைக்க வேண்டும்.
இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சருடன் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்கேஎம்.சிவகுமார், நிர்வாகிகள் ராஜகோபால், டியூக் துரைராஜ், சுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.








