என் மலர்
விருதுநகர்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- ஓய்வூதியர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகரில் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் மாநில தலைவர் ராகவன் கலந்து கொண்டு பேசினார். மாநில இணைச்செயலாளர் முத்துக்குமாரசாமி வாழ்த்தி பேசினார். மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தா தொகையை ரூ.300 ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் ரூ.1½ லட்சம் நிதி வழங்க வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ெரயில் பயணத்தில் முதியோர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த சலுகைகளை வழங்க வேண்டும்.
அரசு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும். முதியோருக்கு தனியாக அமைச்சரவை ஏற்படுத்துவதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற கலெக்டர் ஜெயசீலனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.
- நரிக்குடி அருகே இருஞ்சிறை பெரிய கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும்.
- விவசாயிகள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பள வில் பெரிய கண்மாய் உள்ளது. இது பொதுப் பணித் துறையால் பராம ரிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து இருஞ்சிறை, வடக்குமடை, செங்கமடை, தர்மம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இருஞ்சிறை கண்மாய் பகுதியில் பெரியமடை, கருதாமடை, தாழிமடை என 5 க்கும் மேற்பட்ட மடைகள் இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு தோறும் கிருதுமால் விவசாய பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விரகனூர் அணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து உளுத்திமடை, கட்டனூர் வழியாக இருஞ்சிறை பெரிய கண்மாயை வந்தடைகிறது.
இந்த நிலையில் கண்மாய் மடைகள், அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் பல வருடங்களாக தூர்வா ராமல் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கண்மாய் பகுதியின் சில மடைகள் சேதமடைந்தும், பெரும்பாலான மடைகளில் துடுப்புகள் இல்லாமலும் இருப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது அது வீணாக வெளியேறி அருகிலுள்ள தரிசு நிலங்க ளுக்கு செல்வதாகவும், இதனால் கண்மாய் நீர் முழுமையாக விளை நிலங்களுக்கு சென்று சேர்வதில்லை என விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.
இது குறித்து பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது. முக்கிய பாசன ஆதார மாக உள்ள இந்த கண்மாயை தூர்வாரு வதற்கு போதிய நிதி ஆதாரமில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், வழக்கம் போல விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
மேலும் கடந்த முறை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீர் வெளியேறாமல் இருக்க விவசாயிகள் மணல் மூட்டைகளை மடைக ளுக்குள் அடுக்கி அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இருஞ்சிறை கண்மாய்க்கு மீண்டும் தண்ணீர் வந்தாலும் வீணாக வெளியேறி விவசாயத்திற்கு பயன்படாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த வருடம் வைகை அணை திறக்கப்பட்டு இருஞ்சிறை கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் விவசாயம் முடிந்து 4 மாத தண்ணீர் இருந்தும் சேதமடைந்த மடைகளால் கண்மாய் நீரானது வீணாக வெளியேறி விட்டதாகவும், தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி சரிவர சீரமைக்கப்படாத காரணத்தால் புதர்மண்டி கிடப்பதாகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் இருக்கும் பகுதியானது தடம் தெரியாமல் போனதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இருஞ்சிறை பெரிய கண்மாயை நம்பி 10 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சுமார் 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகளின் அலட்சி யத்தால் கண்மாய் பகுதி செப்பனிடப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், 1990-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டிய உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே பொதுப்பணி துறையினர் இதை கவனத்தில் எடுத்து அனைத்து மடைகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த மடைகள், கால்வாய்களை தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்து தர வேண்டும் எனவும், கண்மாயில் தண்ணீர் சீராக செல்லவும், வீணாக தண்ணீர் வெளியேறாத வகையிலும் கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கைத்தறி உதவி இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி கிராமத்தில் கைத்தறி துறை சார்பாக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நெசவாளர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், கைத்தறி உதவி இயக்குனர் வெங்க டேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து. நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னர்.
பின்னர் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-
விருதுநகர் மாவட்டத்தில் அதிக நெசவாளர்களை கொண்ட தொகுதி ராஜ பாளையம் தொகுதி தான். தமிழ்நாட்டில் அதிகளவில் காடா நெசவு செய்து கொடுக்கும் தொகுதியாக ராஜபாளையம் தொகுதி திகழ்கிறது. நெசவாளர் களுக்கு நமது முதல் அமைச் சர், மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் களான வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனும், நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னர சும், ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் எப்போதும் உறு துணையாக இருப்போம் என உறுதி கூறினார்.
இந்நிகழ்வில் பேரூர் சேர்மன் ஜெயமுருகன், தலைமை மருத்துவர் கரு ணாகரபிரபு பேரூர் செயலா ளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்லலாம் என வனத்துறை அனுமதியளித்துள்ளது.
- 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்டோர்கள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவர்.
விருதுநகர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தையொட்டி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புரட் டாசி மாத மகாளய அமாவாசை, பிரதோ ஷத்தை முன்னிட்டு வருகிற 12-ந்் தேதி முதல் 15-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை யினர் அனுமதி அளித்துள் ளனர்.
ேமலும் சதுரகிரி கோவி லில் ஆனந்தவல்லி அம்ம னுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கியமான அம்பு விடும் நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவிற்கு, விழா தொடங்கும் நாளில் இருந்து பக்தர்கள் மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண் டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வருகிற 22 முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை யேற அனுமதிக்கப்படு வார்கள். 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்டோர்கள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் கத்தி போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இரவில் கோவிலில் தங்க அனுமதி யில்லை. மழை வந்தால் பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதிக்கப் படாது உள்ளிட்ட கட்டுப் பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
- கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை(35).இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த மில் தொழிலாளியான முத்துமாரியுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் நெருங்கிய தோழி ஈஸ்வரி. இந்த நிலையில் ஈஸ்வரி சில நாட்களாக முத்துமாரியுடன் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அழகுமலை, ஈஸ்வரிக்கு போன் செய்து முத்துமாரியுடன் ஏன் பேசவில்லை என விசாரித்துள்ளார். அப்போது ஈஸ்வரியின் சகோதரர் பாலமுருகன் செல்போனை பறித்து அழகுமலையை கண்டித்துள்ளார். பின்னர் முத்துமாரியின் வீட்டின் முன்பு அழகுமலை அவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது பாலமுருகன், தனது 2 நண்பர்களுடன் அங்கு வந்தார். அவர்கள் அழகுமலையை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்தி ரமடைந்த பாலமுருகன் தான் வைத்திருந்த கத்தியால் அழகுமலையை குத்திவிட்டு தப்பி சென்றார். அழகுமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நிர்வாகள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்ப தாவது:-
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2023-24) முதல் இப்கோ டோக்யோ ஜெனரல் இன்சூ ரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ரபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ காப்பீடு செய்து கொள்ளலாம்.
வேளாண் பயிர்களை பொருத்த வரை ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ரூ.394, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.317, சோளம் பயிருக்கு ரூ.135, கம்பு பயிருக்கு ரூ.160, பாசிப் பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.210, பருத்தி ரூ.508, நிலக் கடலை ரூ.312, எள் ரூ.120, எனவும் மற்றும் சூரியகாந்தி ரூ.187 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தோட்ட பயிர்களை பொருத்த வரை ஏக்கருக்கு கொத்தமல்லி ரூ.575, மிளகாய் ரூ.1018, வெங்காயம் ரூ.1765, வாழை ரூ.3445 எனவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
ரபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகை களுக்கு நவ. 15-ந்தேதி, மக்காச்சோளம், கம்பு, துவரை, பருத்தி பயிர்க ளுக்கு நவ. 30-ந் தேதி, சம்பா-நெல், சோள பயிர்களுக்கு டிச. 15-ந் தேதி, நிலக்கடலை, சூரியகாந்தி பயிர்களுக்கு டிச.30, எள் பயிருக்கு ஜன.31 வரையிலும் ஆகும்.
கொத்தமல்லி ஜன.18, மிளகாய், வெங்காயத்திற்கு ஜன.31, வாழை பயிர்களுக்கு பிப்.29 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- முகாம் ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை சத்திரிய ராஜுக்கள் மகாசபை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சக்கராஜா கோட்டை பூசப்பாடி தாயார் பி.ஏ.சி ராமசாமி ராஜா பண்ணை மாளிகையில் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சக்கராஜாகோட்டை மகாசபை மற்றும் தேசிங்கு ராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை சக்கராஜா கோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா தொடங்கி வைத்தார்.
கண் சிகிச்சை சக்தி கண் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் குழுவினர் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கண்புரை, கண்ணீர் அழுத்தம், நீர் வடிதல், மாலை கண், மாறு கண், கண்களில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். முகாமில் கண்புரை உள்ளவர்களை அன்றே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச லென்ஸ் பொருத்தப்பட்டனர் மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் லென்ஸ் பொருத்துபவர்களுக்கும் இலவசமாக மருந்துவம் மற்றும் கண் கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை சத்திரிய ராஜுக்கள் மகாசபை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.
- விருதுநகர் தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு, பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.
- வழிமுறைகளை தெரிந்து கொண்டு போட்டித்தேர்வுக்கு தயார் செய்தால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசியதாவது:-
உலகத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக எளிதாக இருக்காது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்பது வாழ்க்கை என்ற போர்க் களத்தில் போர் புரியும் வாள். ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டு முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எதற்கு, எப்படி என்ற கேள்வியை விட நாம் ஏன் செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம். மாணவர்கள் தற்போது படிப்பதற்கான நோக்கம் நீங்கள், உங்கள் குடும்பம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்ப தற்காக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொதுநோக்கு சிந்தனையை கல்வி கற்று தருகிறது. ஆக்கமிக்க தொழிலை முதலில் தேர்வு செய்திட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகம் ஆகியவற்றுடன் தினந்தோறும் நிறைய உரையாட வேண்டும். உரையாடல்கள் புதிய னவற்றை கற்றுத்தரு கின்றன.
எனவே சிந்தனைத் திறன், ஆர்வம், படைப்பு திறன், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் ஒரு புதிய வரலாற்றை படைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளரின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட் சிக்கு உட்பட்ட கங்கர் குளத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளரின் பதவி காலம் குறித்து விவசாய சங்க பிரதிநிதி அம்மையப்பன் கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன், அம்மை யப்பனை காலால் எட்டி உதைத்தார். அவருக்கு ஆதரவாக தேவேந்திரபுரத்தை சேர்ந்த ராசு (42) என்பவர் அவரது கண்ணத்தில் அறைந்தார்.
மான்ராஜ் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பாக இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து தங்க பாண்டியனின் ஊராட்சி செயலாளர் பதிவியில் இருந்து பணி யிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து வன்னி யம்பட்டி போலீசில் அம்மையப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தங்கபாண்டியன் மற்றும் ராசுவை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராசுவை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ேமலும் தலைமறைவாக உள்ள தங்கபாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.
- மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய அ.தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
- நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள கிராமங்களில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார். அப்போது வேலை பார்க்கும் பெண்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பணிகளை டெண்டர் முறையில் கொடுப்பது ஆபத்தான வேலையாக முடியும். மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்துவதை கைவிட்டு நிரந்தரமாக பணியா ளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும்.
சீமான் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். அவரை தமிழக மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். கர்நாடகாவில் மொழி வெறியர்களை தூண்டி விட்டு பா.ஜ.க. தமிழகத்திற்கு எதிராக பிரச்சினை செய்து வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது. மோடி பிரதமராக வரக்கூடாது என்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கும் சொல்ல தைரியம் இல்லை.கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. வேசம் போடுகிறது.
நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், ஓபிசி பிரிவு சுப்புராம், வட்டாரத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- நவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலையில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.
- இந்து சமய அற நிலைய துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சதுரகிரி சுந்தரமகாலிங் கம் மலை கோவிலில் உள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வரு கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பக மாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் வழிபாடு நடத்து வதற்கு வனத்துறை பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அக்டோபர் 15 முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி திருவிழா ஏற் பாடுகள் குறித்து சுந்தர பாண்டியம் ஏழூர் சாலியர் சமூக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
அதில் 10 நாள் நடை பெறும் நவராத்திரி திரு விழாவில் கடைசி 3 நாட்கள் இரவில் மலை கோயிலில் தங்கி வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஒரு ஊருக்கு 50 பேர் வீதம் மொத்தம் ஏழு ஊர்களுக்கு மொத்தம் 350 பேர் தங்கு வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை மற்றும் இந்து சமய அற நிலைய துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருச்சுழி அருகே 12 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மில் தொழிலாளிகள் கைதானார்.
- காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்பட்டு வருவ தாக திருச்சுழி காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழியை அடுத்துள்ள தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சந்வதேகத்திற் கிடமாக சுற்றிதிரிந்த 2 நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை மேற் கொண்டனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் 2 நபர்களிடமும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சுமார் 12 கிலோ புகையிலை பொருட் கள் இருந்தது தெரியவந்தது.சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து அவ்வப் போது பொது வெளியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து புகையிலை பதுக்கி விற்றதாக மில் தொழிலாளிகள் மேலகண்ட மங்கலம் மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜ் (வயது 37). வெள்ளையாபுரம் தெற்கு தெரு பகுதி யை சேர்ந்த ஆழ்வார் சாமி மகன் ஞானகுரு (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.






