2 வீடுகளில் புகுந்து 19 பவுன் நகை கொள்ளை

2 வீடுகளில் புகுந்து 19 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வீடுகளில் புகுந்து 19 பவுன் நகை கொள்ளை
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டங்குளம் ரோடு விழுப்பனூரில் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 15½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய விஜயகுமார் கதவு உடைக்கப்பட்டு நகை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு கொள்ளை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணா மலையை சேர்ந்தவர் மாரீஸ்வரி(36). சம்பவத் தன்று இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com