search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சி
    X

    மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சி

    • மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.
    • மருதுபாண்டியர்க ளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த நரிக்குடி முக்குளம் செல்வதற்கு அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.

    விருதுநகர்

    மருது பேரவை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வா கத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:-

    மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி முக்குளத் தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க வேண் டும். மருதுபாண்டி யர்கள் பிறந்த இடத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வாழ்ந்த ஊர் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருதுபாண்டியர்க ளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த நரிக்குடி முக்குளம் செல்வதற்கு அனைவரையும் அனுமதிக்க வேண்டும். மருதுபாண்டியர் ஆலயத்தில் அமைந்துள்ள நரிக்குடி அரசு பள்ளிக்கு விடுமுறை வழங்க வேண்டும்.

    திருப்பத்தூர் காளையார் கோவிலில் நடைபெறுவது போல் மருது பாண்டியர்கள் பிறந்த நரிக்குடி முக்குளத் தில் அரசு விழா நடத்த வேண்டும். நரிக்குடி முக்கு ளம் அரசு தொடக்கக் கல்வி பள்ளி வளாகத்தில் அமைந் துள்ள பெரிய மருதுபாண்டி யர் ஆலயம் மற்றும் ஐந்து ராணிகளின் ஆலயத்தை புதிதாக கட்டித்தர வேண் டும். மேற்கண்ட கோரிக்கை கள் குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×