என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இம்மாத இறுதிக்குள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் உதவித் தொகை இனங்களுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும் இம்மாத இறுதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்காணும் கால நிர்ணயத்திற்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எவ்வித விடுதலுமின்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் ராபி பருவ பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகையை பதிவு செய்து விற்பனைப் பட்டியல் பெற்று தாங்கள் சாகுபடி செய்யும் நிறத்திற்கு ஏற்றவாறு தேவையான உரங்களை மட்டுமே வாங்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் போது கட்டாயமாக ஆதார் அட்டையுடன் கைரேகை பதிவு செய்துதான் உரம் விற்பனை செய்ய வேண்டும்.
ஒரு நபருக்கு அதிக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபரின் பெயரில் உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மொத்த விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் கூடாது. சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது உரிய ஆவணத்துடன் வாகனங்களை அனுப்ப வேண்டும்.
உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாத இடங்களில் உரங்களை இருப்பு வைத்துக்கொள்ள கூடாது. வேளாண் துறையின் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்ய கூடாது. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலையே நீடிக்கிறது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 257 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 50 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 685 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 473பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 137 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.
இந்த நிலையில் இம்மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. 1,523 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 1,400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.
மாவட்டத்தில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவுகளும் உடனுக்குடன் தெரிவிக்கப்படுவதில்லை. மேலும் பாதிப்படைந்தோர் பட்டியலில் முழு விவரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை. தொடர்ந்து மாவட்ட சுகாதார துறையின் பட்டியல் மாநில பட்டியலில் இருந்து முரண்பட்டு காணப்படுகிறது.
வெளியிடப்படும் பட்டியல் வெளிப்படைத் தன்மையுடன் இல்லாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
மாவட்ட சுகாதாரத்துறை தினசரி நோய் பாதிப்பு ஏற்படுபவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கவோ அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையே நீடிக்கிறது.
எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மக்களும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும்.

விருதுநகரில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.
விருதுநகர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்ததுடன் அதற்காக முதல் கட்டமாக ரூ.50 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில் பொது மருத்துவ கல்லூரி இல்லாத நிலையில் பல் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்க இயலாது என இந்திய மருத்துவ குழும தெரிவித்தது.
இதனால் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது விருதுநகரில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.390 கோடி மதிப்பீட்டில் பொது மருத்துவக்கல்லூரி மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
வரும் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவக்கல்லூரியில் முதல் கட்டமாக 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட உள்ள நிலையில் இந்திய மருத்துவக்குழு விதிமுறைப்படி இதனுடன் இணைந்து பல் மருத்துவ தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் மருத்துவக்குழுமத்தின் விதிமுறைப்படி மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆதலால் பொது மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்த பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி மக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். ஆதலால் அவர் தான் அடுத்த முதல்-அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ஜெயலலிதாவை பற்றியும் அவதூறாக பேசியவர்கள் மீது தலைமையின் ஒப்புதல் கிடைத்தவுடன் அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளேன். நாட்டு மக்களின் தேவை அறிந்து மு.க.ஸ்டாலின் பேசுவது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சந்திரபிரபா எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 734 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15,530 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
3,503 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 145 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.
மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது. 1,745 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 3,503 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலையில் நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறையை உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவில்லை. கடந்த 2 தினங்களில் மாவட்டத்தில் நோய் பாதிப்பு ஏற்பட்ட 32 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டதாகவோ, வீடுகளில் தனிமைப்படுத்தபட்டதாகவோ தகவல் இல்லை.
இதிலிருந்து அவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளது என்பதை மாவட்ட சுகாதார துறையினர் முறையாக தெரிவித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்களா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மொத்தத்தில் முதல்-அமைச்சர் வருகைக்கு பின்பு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட வேண்டிய நிலையில் அதற்கு மாறாக அனைத்து நடவடிக்கைகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரியாபட்டி பகுதியில் தொடர்மழை பெய்வதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி:
காரியாபட்டி தாலுகா, சூரனூர், கூவர்குளம், கோவிலாங்குளம் ஆகிய கிராமங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நல்ல விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சூரனூர் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரும், கூவர் குளம் கிராமத்தில் 10 ஏக்கரும், கோவிலாங்குளம் கிராமத்தில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கின.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய குறைந்தது ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.
இந்தநிலையில் காரியாபட்டி பகுதியில் பெய்த தொடர்மழையினால் நல்ல விளைந்த வந்த நெற்பயிர்கள் சாய ஆரம்பித்து விட்டன.
இந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரியாபட்டி தாசில்தார் தனக்குமாரிடம், குரனூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், டி.செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கை மார்பன் ஆகியோர் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் தனக்குமார், மாவட்ட கலெக்டருக்கு இந்த மனுவை அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

வத்திராயிருப்பில் சாலை வசதி இல்லாததால் குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்டது சத்திரம் தெரு. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அதில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் தண்ணீர் தேங்குவதால் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர்.
இந்த சாலை வழியாக தான் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகங்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர். இவ்வழியாக செல்லும் வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. மழைக்காலங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
இந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு சத்திரம் தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள நத்தம்பட்டி விநாயகர் கோவில் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கீழ ராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோவில் அருகே சூதாடியதாக சேத்தூர் பசும்பொன் (வயது 62), ஆர்.ரெட்டியப்பட்டி பேச்சிமுத்து (65), சமுசிகாபுரத்தை சேர்ந்த குருசாமி (58), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வீரசிகாமணி (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நரிக்குடியில் டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரியாபட்டி:
நரிக்குடி சமத்துவபுரம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக விஜய கோபியும், விற்பனையாளர்களாக சோலை ராஜ் மற்றும் குருவி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் இவர்கள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் கடையை திறக்க வந்த போது டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நரிக்குடி போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிந்த லாக்கரை உடைக்க முயன்றதும், லாக்கரை உடைக்க முடியாததால் கடையில் இருந்த 56 மது பாட்டில்களை திருடி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜய கோபி கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நரிக்குடியில் பஸ் நிலையம் சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், நரிக்குடியை சுற்றி சுமார் 50-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் பல்வேறு காரணங்களுக்காகவும், வேலைக்காகவும் நரிக்குடிக்கு தான் வந்து செல்கின்றனர். மேலும், நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், சிவகங்கை, வீரசோழன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் நடமாட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். ஆனால் பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பஸ் நிலையத்திற்குள் சாலை வசதி இல்லாமல் வெறும் மண் சாலையாகவே உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பஸ் நிலையத்தின் உள்புறம் உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சேறும், சகதியுமாக உள்ளதால் பயணிகள் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.
இங்கு சாலை அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், நரிக்குடி பஸ் நிலையத்தில் சிமெண்டு அல்லது தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவரது மூத்த மகன் முத்து கூடலிங்கம் (4). இவன் மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டிலுள்ள ஸ்விட்ச் போர்டை லைட் போடுவதற்காக தொட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிறுவனை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்து கூடலிங்கத்தை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர்மழையினால் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் 27 அடியாக உயர்ந்துள்ளது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை மற்றும் சாரல் மழையால் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 21 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக தற்போது பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 27 அடியாகவும், கோவிலாறு அணையின் நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்து உள்ளது. பிளவக்கல் பெரியாறு அணைக்கு 90 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் விவசாய பாசனத்திற்காக 63 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கோவிலாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாய்க்கும், மூவரை வென்றான் சாத்த நேரி கண்மாய்க்கும் தண்ணீர் சென்று கொண்டிருப்பதாகவும் வத்திராயிருப்பு சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 14 கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாகவும், 5 கண்மாய் 90 சதவீதம் நிரம்பி உள்ளதாகவும், மீதமுள்ள 21 கண்மாய்கள் 30 முதல் 75 சதவீதம் வரை நிரம்பி உள்ளதாகவும், அணைக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்து வருவதாலும், வத்திராயிருப்பு பகுதியை சுற்றி உள்ள கண்மாய்கள் நீர் நிரம்பி வருவதாலும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆண்டு பெய்த மழையை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். தொடர்ந்து மழை பெய்வதால், அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பதாலும் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.