என் மலர்
விருதுநகர்
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சாத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்:
சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் மண்டல செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர் தொகுதி செயலாளர் பாண்டி மற்றும் சாத்தூர் தொகுதி தலைவர் முனியப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கிணைத்தனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமணமான 2 மாதங்களில் வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பால் மனைவியை சித்ரவதை செய்த போலீஸ்காரர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் மாரியப்பன். நீலகிரி மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் இவருக்கும் விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்ற சூர்யா (வயது 29) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 22 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் உமா மகேஸ்வரியின் தந்தைக்கு தென்காசி மாவட்டம் குறிஞ்சாகுளத்தைச் சேர்ந்த ஜெயமாலினி என்ற பெண் தனக்கும் போலீஸ்காரர் மாரியப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அந்தப் பெண் சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி இதுபற்றி தனது கணவர் போலீஸ்காரர் மாரியப்பனிடம் கேட்டபோது அவர் அது பற்றி பேசக்கூடாது என்று கூறியதுடன் சித்ரவதை செய்தாராம். இதனை தொடர்ந்து உமாமகேஸ்வரி தனது மாமனார் மற்றும் தனது கணவர் மாரியப்பன் சகோதரர் ஊத்துமலையில் போலீஸ்காரராக பணியாற்றும் மகேந்திரன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சித்ரவதை செய்துள்ளனர். மேலும் ஜெயராணியும் உமா மகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உமாமகேஸ்வரி விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் போலீஸ்காரர் மாரியப்பன், அவரின் சகோதரர் போலீஸ்காரர் மகேந்திரன், மகேந்திரன் மனைவி உமா மகேஸ்வரி, மாமனார் பரமசிவன், மைத்துனர் சந்திரசேகரன், அவரது மனைவி மகராசி, ஜெயராணி, அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கார்த்திகை மாத சனி பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. புயல் காரணமாக கடந்த பிரதோஷம் மற்றும் பவுர்ணமி தினத்தின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று கார்த்திகை சனி பிரதோஷத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை நுழைவாயில் பகுதிக்கு வந்தனர்.நேற்று காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது.
பின்னர் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினிகள் மூலம் கை கழுவுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்குபின் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப் பாறையில் மூலிகைத் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர். பின்னர் மலை ஏற ஆரம்பித்தனர். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி, சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சனி பிரதோச சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சாமி, சந்தன மகாலிங்கம் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நேற்று கார்த்திகை மாத சனிப் பிரதோஷம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று சனி பிரதோஷத்தையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிபாறை ஓடை, எலும்போடை, நீரோடை பகுதிகளில் மழைக் காலங்களில் பக்தர்கள் தண்ணீருக்குள் இறங்கி செல்லும் சூழ்நிலை உள்ளதாலும் சாதாரண மழை பெய்தால் நீரோடை பகுதிகளில் வெள்ளம் வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் முடியாமல், கோவிலில் இருந்து அடிவார பகுதிக்கு வர முடியாமல் தவித்தனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் சாலை மற்றும் நீரோடைகளில் பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு அறிவித்தது.
தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து மலைப்பாதையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே சாலை வசதியும், அடிவாரப் பகுதியில் இருந்து கோவில் வரை 5 இடங்களில் குடிநீர் தொட்டி, வேட்டைத் தடுப்பு கூடரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் விசுவநாத் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மலைப் பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் பாலம் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீக்குச்சி கம்பெனியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையத்தில் காந்தி என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி கம்பெனி உள்ளது.
நேற்று நள்ளிரவு இங்கு தீக்குச்சி தயாரிக்க வைத்திருந்த குச்சி குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறைனர். போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான குச்சிகள் தீயில் கருகி சேதமடைந்தது.
நள்ளிரவு என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின் கசிவு கரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையத்தில் காந்தி என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி கம்பெனி உள்ளது.
நேற்று நள்ளிரவு இங்கு தீக்குச்சி தயாரிக்க வைத்திருந்த குச்சி குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறைனர். போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான குச்சிகள் தீயில் கருகி சேதமடைந்தது.
நள்ளிரவு என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின் கசிவு கரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியின் உட்கடை கிராமங்களான இடைய பொட்டல் பட்டி, அருந்ததியர் காலனி, லட்சுமியாபுரம் ஆகிய கிராம மக்களுக்கான மயானம் காமராஜர் நகருக்கு மேற்கே ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இப்பாதையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தாய் திட்டத்தில் காமராஜர் நகரில் இருந்து அருந்ததியர் காலனி வரை சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையானது பாதி தூரத்தில் இருந்து மயானம் வரை அமைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்னர் காமராஜர் நகரில் இருந்து அருந்ததியர் காலனி வரை சாலை அமைத்தபோது, பாதியில் இருந்து தொடங்கிய சாலையை புதுப்பிக்கவில்லை.
காமராஜர் நகரில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலையானது சேதமடைந்து இருக்கிறது. ஆதலால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல சிரமமாக உள்ளது.
மேலும் மயானத்தில் பொது கழிவறை, தண்ணீர் வசதி இல்லை. எனவே மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைப்பதுடன், கழிவறை, தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே டயர் விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரில் திருவேங்கடத்தை சேர்ந்த கர்வின் அழகுமலை என்பவர் கனரக வாகன டயர் விற்பனை நிலையம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள லாரி டயர்கள் மற்றும் ரொக்கம் ரூ.19 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றதாக கர்வின் அழகுமலை அளித்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வத்திராயிருப்பில் பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து விவசாயிகள் தங்களது பணிக்கு செல்கின்றனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆதலால் பாசனத்திற்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்மழையினால் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பெரியகுளம், வீராகசமுத்திரம் உள்ளிட்ட 12 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மாவட்டத்தின் முக்கிய மிகப்பெரிய அணையான பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும்.
தற்போது பெரியகுளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் தண்ணீர் வத்திராயிருப்பு - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள அர்ச்சுனா நதி வழியாக செல்கிறது.
அர்ச்சுனா நதி என்ற ஆற்றில் பாலம் இல்லை. ஆதலால் வத்திராயிருப்பில் உள்ள விவசாயிகள் வில்வராயன் கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் வயல்களுக்கு இந்த ஆற்றை கடந்து தான் செல்கின்றனர்.
மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் அவர்கள் வேறு வழியின்றி தண்ணீருக்குள் பயத்துடன் நடந்து சென்று தான் தங்களது பணிகளை தொடருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
அர்ச்சுனா நதியை கடந்து தான் நாங்கள் வில்வராயன் கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் வயல்களுக்கு செல்கிறோம். ஆற்றை கடந்து செல்ல பாலம் வசதி இல்லை. ஆதலால் தண்ணீரில் நடந்து சென்று தான் நெற்பயிர்களுக்கு உரமிடுதல், களை பறித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் சமயங்களில் சற்று பயத்துடன் தான் ஆற்றை கடக்க வேண்டியுள்ளது.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றை எளிதில் கடந்து செல்லும் வகையில் உடனடியாக பாலம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விருதுநகரில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே பல் மருத்துவக்கல்லூரிக்கு விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும் என கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்:
விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தவுடன் முதல் கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் பொது மருத்துவ கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க இயலாது என இந்திய மருத்துவக்குழு தெரிவித்ததன் அடிப்படையில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என உறுதி பட கூறினார். மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் பேரில் பொது மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத்தொடர்ந்து இந்திய மருத்துவ குழு பல் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்க முன் வந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகரில் பல்மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். பல் மருத்துவக்கல்லூரிக்கான இடத்தினை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கலெக்டர் அலுவலக வளாகம் அருகே பொது மருத்துவ கல்லூரி அமைந்துள்ள இடத்தில் 5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெய சந்திரன் விருதுநகர் வந்து சென்றார்.
இதனை தொடர்ந்து நேற்று மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு விருதுநகர் வந்து பல் மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார். பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
மேலும் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு இதுகுறித்து ஆலோசனை நடத்தியதுடன் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க முறையாக இந்திய மருத்துவ குழுவிற்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
சிவகாசி-விருதுநகர் மெயின்ரோட்டில் உள்ள தி அரசன் அலுமினியம் நிறுவனத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிவகாசி:
சிவகாசி-விருதுநகர் மெயின்ரோட்டில் உள்ள தி அரசன் அலுமினியம் நிறுவனத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, பொது மருத்துவம், இ.சி.ஐ. ஆகியவை பார்க்கப்பட்டது. 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நோய் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் சுஜி ஹெல்த் சென்டர் இயக்குனர் முருகேசன், லயன்ஸ் நடராஜன், சிவகாசி லயன்ஸ் கிளப் காஸ் மாஸ் தலைவர் முருகவேல், அரசன் மாடல் பள்ளி முதல்வர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு அரசன் அலுமினியம் நிறுவனத்தின் இயக்குனர் கணேஷ்குமார் நினைவு பரிசு வழங்கினார்.
விருதுநகரில் திருமணமான 2 மாதத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக போலீஸ்காரர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி என்ற சூர்யா (வயது29). இவருக்கும், தென்காசி மாவட்டம் கீழச் சுரண்டையைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
மாரியப்பன் நீலகிரி மாவட்டம் அம்பலப்புலி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது 22 பவுன் நகை, ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் உமா மகேஸ்வரியின் தந்தை மற்றும் தாய்மாமாவுக்கு ஜெயராணி என்பவர் ஒரு போட்டோவை அனுப்பி உள்ளார். அதில், ஜெயராணியுடன் மாரியப்பன் இருந்தார். தங்களுக்கு இடையே ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அவரை வேறு எந்த பெண்ணுடனும் சேர்ந்துவாழ விடமாட்டேன் என்றும் ஜெயராணி போட்டோவுடன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி குடும்பத்தினர் மாரியப்பனிடம் கேட்டபோது, அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாங்கள் போலீஸ் குடும்பம். எங்களிடம் யாரும் கேட்க முடியாது என கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீ சில் உமாமகேஸ்வரி புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் மாரியப்பன், அவரது அண்ணன் மகேந்திரன் (நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்) அவரது மனைவி உமாமகேஸ்வரி, மாமனார் பரமசிவம், மைத்துனர் சந்திரசேகரன், அவரது மனைவி மகராசி, உறவினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி என்ற சூர்யா (வயது29). இவருக்கும், தென்காசி மாவட்டம் கீழச் சுரண்டையைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
மாரியப்பன் நீலகிரி மாவட்டம் அம்பலப்புலி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது 22 பவுன் நகை, ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் உமா மகேஸ்வரியின் தந்தை மற்றும் தாய்மாமாவுக்கு ஜெயராணி என்பவர் ஒரு போட்டோவை அனுப்பி உள்ளார். அதில், ஜெயராணியுடன் மாரியப்பன் இருந்தார். தங்களுக்கு இடையே ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அவரை வேறு எந்த பெண்ணுடனும் சேர்ந்துவாழ விடமாட்டேன் என்றும் ஜெயராணி போட்டோவுடன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி குடும்பத்தினர் மாரியப்பனிடம் கேட்டபோது, அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாங்கள் போலீஸ் குடும்பம். எங்களிடம் யாரும் கேட்க முடியாது என கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீ சில் உமாமகேஸ்வரி புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் மாரியப்பன், அவரது அண்ணன் மகேந்திரன் (நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்) அவரது மனைவி உமாமகேஸ்வரி, மாமனார் பரமசிவம், மைத்துனர் சந்திரசேகரன், அவரது மனைவி மகராசி, உறவினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம் அருகே நெல் மூடை ஏற்றி வந்த லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதி கவிழ்ந்தது.
தளவாய்புரம்:
தர்மபுரி மாவட்டம் சித்தண்ட ஹள்ளி பகுதியை சேர்ந்த அருள் (வயது28) என்பவர் லாரியில் நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை தளவாய்புரத்தில் உள்ள அரிசி அரவை மில்லுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கொல்லங்கொண்டான் விலக்கு அருகே வந்த போது லாரி திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சேதமடைந்தது.
உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சேத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கும், மின்சார வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மின்சார வாரியத்தினர் இந்த பகுதியில் உடனே மின்சாரத்தை தடை செய்தனர்.
பின்னர் ராட்சத எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை சரி செய்தனர். மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து கவிழ்ந்த லாரியில் உள்ள மூடைகள் மற்றொரு லாரியின் மூலம் மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் மாற்றப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் லாரி டிரைவர் அருளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பகுதியில் சாலையில் திரியும் ஆடு, மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பல இடங்களில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவைகளுக்கு போதிய உணவு வழங்க வசதி இல்லாத கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளை வீடு அல்லது தோட்டத்தில் கட்டி வைத்து வளர்க்காமல் நகர் பகுதியில் கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். இவை நகர் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் தெருக்களில் கொட்டி வைக்கப்படும் குப்பைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை சாப்பிட்டு வருகிறது.
இதுபோன்ற கால்நடைகளால் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாசில்தார் ஒருவர் கால்நடைகளின் திடீர் குறுக்கீட்டால் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை சாலையில் திரிய விட்டால் சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தயக்கம்காட்டும் நிலை தொடர்கிறது.
சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அதற்கு அபராதம் விதிக்க விதிகள் இருந்தும் அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது தான் வேதனையானது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






