என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் சம்பத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் வழக்கம்போல் பணியில் இருந்து வந்தார்.
நேற்று விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்ததால் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரது மருத்துவ பரிசோதனை முடிவு வெளியானது. இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக விருது நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ள மற்ற காவல் துறையினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மேலும் பாதுகாப்பு பணியின் போது அவர் அருகே நின்றவர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 30). இவரது மனைவி 6 மாதத்திற்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றவர், தற்போது பிரசவம் நடந்து குழந்தையுடன் அங்கே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மாரீஸ்வரன், 21 வயது பெண்ணை காதலிப்பதாக மிரட்டி வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னை திருமணம் செய்ய வேண்டும் என அவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
உடனே மாரீஸ்வரன், அந்த பெண்ணிடம், என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் அவர் பயந்து போனார். பின்னர் அந்த பெண்ணை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் என்னிடம் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷ பாட்டிலை) நீ குடிக்க வேண்டும் என்று மாரீஸ்வரன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த இளம்பெண், அவர் கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரியவருகிறது். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 19 இடங்களில் மினி கிளினிக் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதில் 13 மினி கிளினிக்குகள் சிவகாசி சுகாதார மாவட்டத்தில் அமைகிறது.
சிவகாசியில் கங்காகுளம், பள்ளபட்டி, சித்துராஜபுரம், பெரியபொட்டல்பட்டி, சுக்கிரவார்பட்டி, மம்சாபுரம், வேண்டுராயபுரம் ஆகிய இடங்களில் முதல்- அமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வேண்டுராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ், வட்டார மருத்துவர் வைரகுமார், ஜெயச்சந்திரன், முன்னாள் யூனியன் சேர்மன் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 864 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,104 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 15,738 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 138 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினமும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. எனினும் தென்மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் தான் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதற்கு காரணம் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தாதது தான் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ள கூரைக்குண்டு கிராமம் மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி வளாகத்தில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ள பகுதியிலேயே நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாததால் அப்பகுதியில் நோய் பாதிப்பு ஏற்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை, கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இம்மாதிரியான நிலை நீடித்தால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் எந்த அளவில் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் என்பது தெளிவாக தெரியும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் தொடர்ந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.






