என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சாத்தூரில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை - காங்கிரஸ் வலியுறுத்தல்
சாத்தூரில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சாத்தூர்:
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை தாங்கினார். பாபு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இதையடுத்து புதிதாக சேர்ந்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
சாத்தூரில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார தலைவர்கள் செந்தியப்பன், சீனிவாசன், சுப்பையா ஆறுமுகம், சேதுராமலிங்கம், செய்யது இப்ராகிம், வேலுச்சாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சாத்தூர் நகர தலைவர் தாமோதரன் செய்திருந்தார்.
முன்னதாக சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் சிறப்பு கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினரால் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் ஒத்தையால் ஒ.மேட்டுப்பட்டி கண்மாய், சூரங்குடி, ஸ்ரீரங்காபுரம் உள்பட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story






