என் மலர்
செய்திகள்

மயானத்திற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக இருப்பதை படத்தில் காணலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியின் உட்கடை கிராமங்களான இடைய பொட்டல் பட்டி, அருந்ததியர் காலனி, லட்சுமியாபுரம் ஆகிய கிராம மக்களுக்கான மயானம் காமராஜர் நகருக்கு மேற்கே ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இப்பாதையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தாய் திட்டத்தில் காமராஜர் நகரில் இருந்து அருந்ததியர் காலனி வரை சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையானது பாதி தூரத்தில் இருந்து மயானம் வரை அமைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்னர் காமராஜர் நகரில் இருந்து அருந்ததியர் காலனி வரை சாலை அமைத்தபோது, பாதியில் இருந்து தொடங்கிய சாலையை புதுப்பிக்கவில்லை.
காமராஜர் நகரில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலையானது சேதமடைந்து இருக்கிறது. ஆதலால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல சிரமமாக உள்ளது.
மேலும் மயானத்தில் பொது கழிவறை, தண்ணீர் வசதி இல்லை. எனவே மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைப்பதுடன், கழிவறை, தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






