என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரைட்டான்பட்டியில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தார்.
அங்கு சிவகாசியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்துதாஸ் (வயது 40) என்பவர் வீடு தோறும் சென்று ஜெபக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
அப்போது 11 வயது சிறுமிக்கு கிறிஸ்துதாஸ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்துதாசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த பட்டாசு தொழிலாளியின் 5 வயது மகளுக்கு அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் காசிலிங்கம் (65) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிலிங்கத்தை கைது செய்தனர்.

கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டால் பெரும் திரளான பொதுமக்கள் கூடுவதுடன் 13-ந் தேதியன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கி விடக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே 12-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவில்களில் மேற்படி நாட்களில் தினசரி பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வழக்கம்போல் நடைபெறும். ஆடி கடைசி வெள்ளி திருவிழாவன்று உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தவும் பொதுமக்கள் வசதிக்காக மேற்படி நிகழ்வினை முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஒரு அறையில் பட்டாசு மருந்துகளிடையே ஏற்பட்ட உராய்வினால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கியது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான குரு ஸ்டார் பட்டாசு தொழிற்சாலை டி.ஆர்.ஓ உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு அறையில் பட்டாசு மருந்துகளிடையே ஏற்பட்ட உராய்வினால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கியது.
இதில் அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த நடுசுரங்குடி சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் ஆரோக்கியராஜ் (வயது 38) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்து ஏற்பட்ட அறை சேதமடைந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடிப்பூரமான இன்று, தேரோட்டம் கோவில் உள் பிரகாரத்தில் நடந்தது. முன்னதாக ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் விமரிசையாக நடத்தப்படும். சிகர நிகழ்ச்சியாக பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள் பிரகாரத்திலேயே பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்தன. கடந்த 7-ந் தேதி கருடசேவையும் 9-ந்தேதி சயன சேவையும் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆடிப்பூர தேரோட்டமும் பக்தர்கள் இன்றி கோவிலுக்கு உள்ளேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆடிப்பூரமான இன்று, தேரோட்டம் கோவில் உள் பிரகாரத்தில் நடந்தது. முன்னதாக ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டன.
மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு பட்டு வஸ்திரங்கள் சுவாமி-அம்பாளுக்கு அணி விக்கப்பட்டது.
பின்னர் ரெங்கமன்னாருடன் ஆண்டாள் சிறிய அளவிலான தங்கத் தேரில் எழுந்தருளினார். கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வடம் பிடித்து இழுக்க, கோவிலுக்கு உள்ளேயே தேரோட்டம் மிக எளிமையாக நடந்து முடிந்தது.
ஆடிப்பூரத்தையொட்டி விமரிசையாக நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டும் எளிமையாக நடந்ததால் களை இழந்து காணப்பட்டது.

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த லாரி, பெண் போலீஸ் முத்து முனீசுவரியின் இருசக்கர வாகனம் மீது திடீரென மோதியது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் மேலத்தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருடைய மனைவி முத்து முனீசுவரி (வயது 36). இவர் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அருகில் உள்ள விஸ்வநத்தம் ஊருக்கு வந்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் போலீஸ் நிலையம் திரும்பிக்கொண்டிருந்தார். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பன்னீர்தெப்பம் அருகில் சென்ற போது பின்னால் வந்த லாரி, பெண் போலீஸ் முத்து முனீசுவரியின் இருசக்கர வாகனம் மீது திடீரென மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்து முனீசுவரியின் உடலை பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த காரைக்காலை சேர்ந்த பாஸ்கர் (53) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான முத்து முனீசுவரிக்கு சக்தி வேல்பாண்டியன் (6), சிவசக்திபாண்டியன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட முத்து முனீசுவரி உடலுக்கு அவருடன் பணியாற்றிய சக போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

விருதுநகரில் இன்று அதிகாலை காய்கறி, இறைச்சி கடைகளில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் தேசபந்து திடல் எதிரே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி, இறைச்சி, பலசரக்கு உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மார்க்கெட் நுழைவு வாயில் அருகில் விஜயா என்பவரது காய்கறி கடையும், ராஜா என்பவரது கருவாட்டு கடையும் உள்ளன.
நேற்று மாலை வியாபாரம் முடிந்ததும் 2 பேரும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 கடைகளில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே விருதுநகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரி மணிகண்டன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 கடைகளின் ஷட்டரை உடைத்தனர். அப்போது கடைக்குள் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் இல்லை என தெரிய வந்தது. திட்டமிட்டு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து இருதலை மணியன் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீநகரில் வசிப்பவர் விஜயஅமிர்தராஜ். இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை கோழியின் கூட்டிலிருந்து சத்தம் வரவே சென்று பார்த்தார். உள்ளே பார்த்தபோது கூட்டினுள் கோழிக்குஞ்சினை விழுங்கிய படி இருதலை மணியன் பாம்பு இருந்தது.
உடனே இதுபற்றி விருதுநகர் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து இருதலை மணியன் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அரசு ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், சிகிச்சை மையங்களில் 33 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனாதொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,879 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 158 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், சிகிச்சை மையங்களில் 33 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளம்பெண்ணை கடத்திச்சென்ற டிரைவர் ஆனந்த பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத இளம்பெண் மாயமாகி விட்டதாக அவரது தாயார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (வயது 20) என்ற டிரைவர், அந்த இளம் பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கண்டறிந்து 2 பேரையும் மீட்டு வந்தனர். இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
எனினும் 18 வயது நிரம்பாத இளம்பெண்ணை கடத்திச்சென்ற டிரைவர் ஆனந்த பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து காவலுக்குஅனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 44 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 20 பேர் வீடு திரும்பினர்.
நேற்றைய நிலவரப்படி 161 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று யாரும் பலியாகவில்லை.
அரசு ஆஸ்பத்திரிகளில் 174 பேரும், சிகிச்சை மையங்களில் 15 பேரும் உள்ளனர்.

காரியாபட்டி அருகே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி:
காரியாபட்டி தாலுகா அயன்ரெட்டியபட்டி துணை சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அயன் ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள நோயாளிகளின் இல்லங்களுக்கு சென்று மருந்துகளை கலெக்டர் வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதன் முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிக்கு பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம் உள்ளடக்கிய மருத்துவ சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், மல்லாங்கிணறு பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆனந்தகுமாரிடம் மருந்து கடை விற்பனையாளர்கள் உனது தாயார் பெயரில் தினேஷ்குமார் அடிக்கடி மாத்திரை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தெய்வானை நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 32). இவர் அங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று வேன் நிறுத்தத்தில் இருந்து ஆனந்தகுமார் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்கள் அங்கு வந்தன. அதில் இருந்தவர்கள் ஆனந்தகுமாரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக ஆனந்தகுமாரின் நண்பர் தினேஷ்குமார் (21), மகேந்திரன் (22), செண்பகராஜன் (24), ஹரிபிரசாத் (22), வெங்கடேஷ்குமார் (21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 5 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட ஆனந்தகுமார் வீட்டிற்கு நண்பர் என்ற முறையில் தினேஷ்குமார் வருவது வழக்கம்.
அப்போது ஆனந்த குமாரின் தாயார் மாத்திரை சாப்பிடுவதை பார்த்துள்ளார். இதை வைத்து அவர் அந்தப்பகுதியில் உள்ள மருந்து கடைகளில் அடிக்கடி தூக்க மாத்திரை வாங்கியுள்ளார். இதனை ஆனந்தகுமாரின் தாயாருக்கு என கூறி வாங்கிச் சென்றுள்ளார்.
அந்த மாத்திரையை வேறு சில மாத்திரைகளோடு சேர்த்து போதை மாத்திரையாக தினேஷ்குமார் பயன்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் ஆனந்தகுமாரிடம் மருந்து கடை விற்பனையாளர்கள் உனது தாயார் பெயரில் தினேஷ்குமார் அடிக்கடி மாத்திரை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார் நேரடியாக தினேஷ்குமாரை சந்தித்து இது பற்றி கேட்டார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இந்த முன் விரோதத்தில் தான் தினேஷ்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆனந்தகுமாரை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.