என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரைட்டான்பட்டியில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தார்.

  அங்கு சிவகாசியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்துதாஸ் (வயது 40) என்பவர் வீடு தோறும் சென்று ஜெபக் கூட்டங்களை நடத்தி வந்தார்.

  அப்போது 11 வயது சிறுமிக்கு கிறிஸ்துதாஸ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

  இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

  அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்துதாசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த பட்டாசு தொழிலாளியின் 5 வயது மகளுக்கு அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் காசிலிங்கம் (65) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிலிங்கத்தை கைது செய்தனர்.
  Next Story
  ×