என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பிளஸ்-1 மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பிளஸ்-1 மாணவி தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்து வந்தார்.

    அப்போது நரிக்குடி அருகே உள்ள கூரைக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் மாணவியை, ஆறுமுகம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து மாணவியை மிரட்டியும் அதே செயலில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானதால் ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    விருதுநகருக்கான குடிநீர் ஆதாரம் குறைந்ததால் நகராட்சி நிர்வாகம் நீர் ஆதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் கடந்த காலங்களில் ஆனைக்குட்டம் அணைப்பகுதி, காரிசேரி கல்குவாரி, ஒண்டிப்புலி கல்குவாரி, சுக்ரவார்பட்டி கோடைகால குடிநீர்தேக்கம் ஆகிய நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பியிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபின் விருதுநகரில் குடிநீர் வினியோகத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. தொடக்கத்தில் தாமிரபணிகூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 25 முதல் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று குடிநீர்வடிகால் வாரியத்தால் உறுதி அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மின்தடை, குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளால் விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு பெரும்பாலான நாட்களில் குறைவாகவே உள்ளது. அதிலும் தற்போது தினசரி 17 லட்சம் லிட்டர் தண்ணீரை கிடைத்து வருகிறது. மேலும் ஆனைக்குட்டம் அணை பகுதியில் உள்ள 12 உறை கிணறுகளிலிருந்து வறட்சி காரணமாக தினசரி 6 லட்சம் லிட்டர் தண்ணீரும், ஒண்டிபுலி கல்குவாரியில் இருந்து தினசரி 8 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கும் நிலை உள்ளது.

    தினசரி அதிகபட்சமாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க கூடிய நிலையில் விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் அதிகரித்து விட்டது. விருதுநகரை பொருத்தமட்டில் தினசரி 60 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்தால் நகர் முழுவதும் பிரச்சினையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். ஆனால் தற்போது குடிநீர் அளவு வெகுவாக குறைந்துள்ள நிலையில் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டபோது மாதம் இருமுறை தற்போது விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் 14 முதல் 15 நாட்களாக அதிகரித்து விட்டது. அதாவது தற்போதைய நிலையில் மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது.

    ஆனால் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நகருக்கும் கிடைக்கும் குடிநீர் அளவு அதிகரிக்க நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது தாமிரபரணியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் பாதையை ஆய்வு செய்வதோடு வல்லநாட்டில் குடிநீர் உறிஞ்சப்படும் இடத்திற்கு நேரில் சென்று தேவையான நடவடிக்கை மேற்கொண்டால் ஓரளவு குடிநீர் அதிகமாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

    இந்தநிலையில் ஆனைக்குட்டம் அணைப் பகுதியில் தற்போது உள்ள 12 உறை கிணறுகளிலும் நீர் ஆதாரம் குறைந்து விட்ட நிலையில் புதிய உறை கிணறுகள் தோண்டவும், இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் நகரில் குடிநீர் மேம்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நகரில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து பெற்று நிலத்தடி நீராதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும் கூடுதல் குடிநீர் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வினியோக மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட 10 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
    தினமும் அதிகாலையில் நடைபெறும் விசுவரூப தரிசன சிறப்பு பூஜையில் பங்கேற்று விட்டு, யானையானது கோவில் பிரகாரம் வழியாக வெளியே வந்து மாடவீதி, நான்கு ரத வீதி உள்பட முக்கிய வீதிகளில் வலம் வருகிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா புத்துணர்வு முகாமில் இருந்து வந்த பிறகு புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    யானைக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டு விட கூடாது என்பதை கருத்தில் கொண்டு யானையை கண்காணிப்பு கேமரா மூலம் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆண்டாள் கோவில் யானைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தினமும் அதிகாலை வேளையில் நான்கு ரத வீதி மற்றும் முக்கிய வீதிகளில் நடை பயிற்சிக்கு அழைத்து செல்ல நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    தினமும் அதிகாலையில் நடைபெறும் விசுவரூப தரிசன சிறப்பு பூஜையில் பங்கேற்று விட்டு யானையானது கோவில் பிரகாரம் வழியாக வெளியே வந்து மாடவீதி, நான்கு ரத வீதி உள்பட முக்கிய வீதிகளில் வலம் வருகிறது. அப்போது ஆங்காங்கே உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து வருகின்றனர். யானை கிருஷ்ணன் கோவில் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    சிவகாசி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அண்ணா காலனி 8-வது தெருவில் வசித்து வந்தவர் முனியாண்டி (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் முனியாண்டிக்கும், மாரீஸ்வரிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவும் வழக்கம்போல் குடும்பதகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மனமுடைந்த முனியாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியாண்டியின் தாய் பாக்கியம், சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முக கவசம் அணியாமல் வந்த 150 பேருக்கு சுகாதாரதுறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட கொரோனா ஆய்வுக்குழுவினை அமைத்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று சிறப்பு தாசில்தார் நாகேஸ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகோபி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார், காவலர்கள் அடங்கிய கொரோனா ஆய்வுக்குழுவினர் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாத நபர்களுக்கும், தனிமனித இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்தனர். அத்துடன் முக கவசம் அணியாமல் வந்த 150 பேருக்கு சுகாதாரதுறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற சோதனையில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.5,200 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
    விருதுநகர் அருகே வியாபாரியிடம் போலி டிரஸ்ட் மூலம் பணம் மோசடி செய்த பரமக்குடி பெண் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் சுதன் (வயது 33). இவர் அங்குள்ள காந்தி பஜாரில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.

    சில நாட்களுக்கு முன்பு இவரை சந்தித்த சிலர் அறக்கட்டளை மூலம் வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்று தருவதாகவும் அதற்கு நீங்கள் சிறிய தொகையை கட்டினால் போதும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

    இதனை நம்பி கடந்த ஆண்டு ரூ. 19 ஆயிரத்தை சுதன் கட்டியுள்ளார். அதன் பிறகு ரூ.52 ஆயிரத்து 320 செலுத்தியுள்ளார். இருப்பினும் அவருக்கு கடன் தொகை கிடைக்கவில்லை.

    எனவே டிரஸ்ட் பெயரில் வந்தவர்களிடம் சுதன் கேட்டபோது மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ. 2 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறினர். இதனால் சந்தேகமடைந்த சுதன், டிரஸ்ட் அலுவலகம் இயங்கி வரும் இடத்திற்குச் சென்று கேட்டார்.

    அப்போது அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மேலும் போலியாக டிரஸ்ட் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும தொடர்ந்தார். இதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலி டிரஸ்ட் அமைத்து பணம் மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிரையை சேர்ந்த காளிமுத்து, அம்பிகா, முத்துக்குமார், அருப்புக்கோட்டை தேவகி, பிரியா, விக்னேஷ் குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகரில் காதல் திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் குல்லூர் சந்தையைச் சேர்ந்தவர் நாகமுத்து (வயது 35). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்த நிர்மலாதேவி (32) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    தற்போது அவர்கள் விருதுநகர் பாலவநத்தம் சாலையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நிர்மலாதேவியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மூர்த்தி, நாகமுத்துவை சந்தித்து கேட்டுள்ளார். இதில் அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் சூலக்கரை போலீசில் புகார் செய்தார்.

    அதில் தனது தங்கை நிர்மலாதேவியை கடந்த 9-ந் தேதி முதல் காணவில்லை என்றும் அவளை கண்டுபிடித்து தருமாறும் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் நிர்மலாதேவியின் கணவர் நாகமுத்துவை தேடிச்சென்றபோது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்து தேடினர்.

    அப்போது அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நாகமுத்து தனது குழந்தைகளுடன் இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் நாகமுத்துவை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மனைவி நிர்மலா தேவியை கொலை செய்து வீட்டின் பின்புறம் வைத்து எரித்து விட்டதாக நாகமுத்து தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    தீபாவளி மற்றும் வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா பண்டிகைக்கு 2 மாதங்களே இருப்பதால் வழக்கமாக வடமாநிலங்களில் ஆர்டர்கள் வரும்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

    இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாட்டின் 80 சதவீத தேவையை நிறைவு செய்கிறது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி, விற்பனை ஆகியவை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.

    பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் முக்கிய வேதிப்பொருட்களை கலக்கக்கூடாது. பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனால் 2019-ம் ஆண்டு பட்டாசு ஆலைகள் 100 சதவீதம் இயங்க முடியவில்லை. பலர் வேலை இழந்தனர்.

    பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 3 மாதங்களுக்கும் மேலாக ஆலைகள் மூடப்பட்டன. இதனால் பட்டாசு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.

    2020-ம் ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதனால் உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போதும் எதிர்பார்த்த அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெறவில்லை.

    இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் பட்டாசு ஆலைகள் மீண்டும் தங்களது உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளது.

    தீபாவளி மற்றும் வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா பண்டிகைக்கு 2 மாதங்களே இருப்பதால் வழக்கமாக வடமாநிலங்களில் ஆர்டர்கள் வரும்.

    ஆனால் இந்த ஆண்டு ஆர்டர்கள் குறைந்த அளவுதான் வருகிறது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாடு முழுவதும் 3-வது அலை செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் உச்சத்தை தொடும் என கருதப்படுகிறது.

    இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பட்டாசு வியாபாரிகள் ஆர்டர்களை கொடுக்க தயங்குவதாக தெரிவித்தனர்.

    தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் குச்சி மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து கருகியது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டி கிராமத்தில் ஹரி கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஹரி மேட்ச் ஒர்க்ஸ் என்ற தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பணி முடிந்து அனைவரும் சென்ற நிலையில் இரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கிருந்த தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் குச்சி மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து கருகியது.

    தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். தீயை அணைக்க முடியாததால் அருகிலுள்ள சிவகாசி தீயணைப்புத்துறையினர் வரவழைத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இரவு நேர தீவிபத்து என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த தீவிபத்தில் சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் தீக்குச்சிகள் எரிந்து கருதியது.

    இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரைட்டான்பட்டியில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தார்.

    அங்கு சிவகாசியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்துதாஸ் (வயது 40) என்பவர் வீடு தோறும் சென்று ஜெபக் கூட்டங்களை நடத்தி வந்தார்.

    அப்போது 11 வயது சிறுமிக்கு கிறிஸ்துதாஸ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்துதாசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த பட்டாசு தொழிலாளியின் 5 வயது மகளுக்கு அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் காசிலிங்கம் (65) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து காசிலிங்கத்தை கைது செய்தனர்.

    ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சத்திரப்பட்டி பிரதான சாலையில் உள்ள ஆர்.ஆர். நகரில் வசிப்பவர் ஆனந்த்குமார். இவரது வீட்டின் மாடியில் சசிக்குமார் என்பவர் மனைவி சாந்தியுடன் வாடகைக்கு இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று 2 குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் சசிக்குமார் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆனந்த் குமார் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.17 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் இந்த திருட்டு பட்டப்பகலில் நடைபெற்றிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர், நம் முன்னோர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    கம்பீரத்தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானையை காடுகளின் பாதுகாவலன் என்று அழைப்பர்.

    இயற்கைக்கும், மனிதனுக்கும் ஒரு உன்னத தோழனாக யானை விளங்குகிறது. வளமான வனங்களுக்கு ஆதாரமாக விளங்கும் யானைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 12-ந் தேதி அதாவது இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

    யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 16 மாநிலங்களில் இதற்கான திட்டம் அமலில் உள்ளது. யானைகள் கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

    இதுகுறித்து வன உயிரின ஆர்வலரும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செயல் அலுவலருமான இளங்கோவன் கூறியதாவது:-

    மனிதர்களின் செயல்பாடுகளினால் யானைகள் குறைந்து வருகின்றன. அதாவது அதிக யானைகள் வேட்டையாலும், நச்சு உணவாலும், நோய் தாக்குதலாலும், மின்சாரம் பாய்ந்தும், ரெயிலில் அடிபட்டும் இறக்கின. இதுதவிர பிற காரணங்களாலும் யானைகள் உயிர் இழப்பது உண்டு.

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர், நம் முன்னோர். அந்த அளவிற்கு யானைகளால் எண்ணற்ற பயன்கள் உள்ளன. யானைகளை காடுகளின் வேட்டைக்காரர் எனவும் அழைக்கிறார்கள்.

    யானைகளின் சாணத்தில் ஊட்டமாக உணவுக்கழிவு இருப்பதால் அதில் விழும் விதைகள் முளைத்து புதிய தாவரங்கள் உருவாகி காடுகளை வளமாக்க உதவுகிறது.

    யானை மலை போன்று காட்சி தருவதால் ஓங்கல் என்றும், கரிய நிறமுடன் இருப்பதால் கள்வன் என்றும், யானைக்கூட்டத்தை கடகம் என்றும் நம் தமிழ் இலக்கியங்கள் அழைக்கின்றன.

    வேழம், களிறு, களபம், உம்பர், இருள் என பல்வேறு சிறப்பு பெயர்களும் யானைக்கு உண்டு. இவ்வாறு பல்வேறு நன்மைகளை அளிக்கும் யானையை அழியாமல் பாதுகாப்பதே நமது கடமையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×