என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் குல்லூர்சந்தை ரோட்டில் வசிப்பவர் நாகேந்திரன் (வயது 61). பார்வை குறைபாடு உள்ள இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டு அலமாரியில் இருந்த 5 கிராம் மோதிரமும், ரூ.3,100-ம் திருட்டு போய் விட்டது. இதுபற்றி நாகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலமுருகன் வீட்டில் சரவெடி தயாரிக்கும் பணி நடந்து வந்தன. இன்று காலை வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள தகர ஷெட்டில் வழக்கமாக ஊழியர்கள் பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவில் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    தற்போது பாலமுருகன் வீட்டில் சரவெடி தயாரிக்கும் பணி நடந்து வந்தன. இன்று காலை வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள தகர ஷெட்டில் வழக்கமாக ஊழியர்கள் பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அருகில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த வெடிகளுக்கும் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. வெடி விபத்தில் அங்கிருந்த தொழிலாளர்கள் சிக்கி கூக்குரலிட்டனர். தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் அந்த பகுதியில் யாரும் செல்ல முடியவில்லை. வெடி விபத்தில் வீடு தரைமட்டமானது. அருகில் இருந்த 8 வீடுகள் சேதம் அடைந்தன.

    விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகராஜ், ராஜீவ்காந்தி மனைவி செல்வி (வயது 35), முத்து செல்வி (38), பாலமுருகன் உள்பட 8 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முகராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் விபத்தில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என போலீசார் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ், வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    இதையும் படியுங்கள்... காபூலில் உள்ள நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்

    அருப்புக்கோட்டையில் 50 பவுன் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக கணவர் உள்பட 4 பேர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் தீபிகா லட்சுமி (வயது 23). இவருக்கும், திருக்குமரன் நகரைச் சேர்ந்த அருண் (24) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் தீபிகா லட்சுமி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் அருணுக்கும் திருமணம் நடந்தபோது 66 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    திருமணமான முதல் நாளே எனது கணவர் மற்றும் உறவினர்கள் சங்கர் ரெட்டி, கலைச்செல்வி, முகிலன் ஆகியோர் பிரச்சனை செய்தனர்.

    தொடர்ந்து எனது கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு 50 பவுன் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்துகிறார். மேலும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் அருண் மற்றும் உறவினர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் பவுன் தாய் (வயது 42). அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையான இவரது கணவர் மலைராஜன் (45). இவர் திருப்பூரில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சாத்தூரில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    அதன்பின்பு வீட்டில் இருந்து வந்த இவர், அவ்வப்போது திருப்பூர் சென்று வந்தார். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படாத நிலையில் விடுதி உரிமையாளர்கள் போலீஸ் துணையுடன் அறையை திறந்து பார்த்தபோது, மலைராஜன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி பவுன்தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கணினி பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பார்வையிட்டார்.
    விருதுநகர்:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பாக அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் கடந்த 3 வார காலமாக உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தங்கள் அருகாமையில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் கணினி பயிற்சி கடந்த 6-ந் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கணினி பயிற்சியினை விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பார்வையிட்டார். இந்த பயிற்சி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    சிவகாசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம் மகன் காளிராஜன் (வயது 26). இவருக்கும் அழகுராசாத்தி என்பவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அழகுராசாத்திக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பின்னர் மனைவியின் தாய் வீட்டில் காளிராஜன் வசித்து வந்துள்ளார். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்ற காளிராஜன், சேனையாபுரம் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகரில் 24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பாண்டியன் நகரில் கண்ணன் (வயது 45) என்பவரது கிட்டங்கியில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அங்கு 50 கிலோ எடை கொண்ட 484 ரேஷன் அரிசி மூட்டைகளும், 50 கிலோ எடை கொண்ட 29 ரேஷன் கோதுமை மூட்டைகளும் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல்செய்யப்பட்ட ரேஷன் அரிசி 24 ஆயிரத்து 200 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் கோதுமை 1450 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூட்டைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டங்கி உரிமையாளர் கண்ணன், வாடிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24), பாண்டியன் நகரை சேர்ந்த அழகு மூர்த்தி (44), பாத்திமா நகரை சேர்ந்த நாககுமார் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வேன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன்பொருள் பதுக்கலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது பற்றி தொடர் விசாரணை நடைபெறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூட்டைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பார்வையிட்டார்.
    விருதுநகரில் பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் ஓ.நடுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவர் பால் வாங்குவதற்காக பக்கத்து வீட்டுக்கு செல்வார். அப்போது அங்கு உள்ள குருசாமி (36) என்பவருக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 12½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் இளங்கோவன் தெருவை சேர்ந்தவர் விஜயராணி (வயது 57). இவர் அதே பகுதியல் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று விஜய ராணி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்துக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 12½ பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதற்கிடையில் ஊர் திரும்பிய விஜயராணி, வீட்டின் தகவு உடைக்கப்பட்டு நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக உறவுக்கார பையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு 17 வயதுடைய உறவுக்கார பையன் ஒருவன் சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுத்துள்ளார். அதற்கு காதலிக்கவில்லை என்றால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் சிறுமியும் காதலித்து வந்தார்.

    இதற்கிடையில், யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரும் உறவுக்கார பையன் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுமியை திருமணம் செய்து தருமாறு அவரது சித்தியிடமும் தகராறு செய்துள்ளார்.

    இதுகுறித்து மாணவியின் சித்தி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாயமான உறவுக்கார பையனை தேடி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் வினிதா (வயது 25).

    இவரும், அதே பகுதியைச்சேர்ந்த முருகன் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடியினர் திருமணம் செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு திருச்சுழி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு காதல் ஜோடியினர் காரில் புறப்பட்டனர். திருச்சுழி-காரியாபட்டி சாலையில் புலிக்குறிச்சி என்ற இடம் அருகே கார் வந்தபோது வேகமாக வந்த மற்றொரு கார் வழிமறித்தது.

    அதில் இருந்து திபு...திபு...வென இறங்கிய கும்பல் முருகனை இழுத்து கீழே தள்ளி தாக்கியது. பின்னர் வினிதாவை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

    இதுகுறித்து முருகன் போலீசில் புகார் செய்தார். அதில், வினோத்குமார், முத்து இருளாயி உள்பட 9 பேர் வினிதாவை கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாகனம் நிறுத்தப்பட்டிருந்த வீட்டில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி, 80 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் வாகனத்தை நிறுத்தாமல சென்றார்

    அவரை போலீசார் பின்தொடர்ந்த போது அவர் அங்குள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலைக்கு எதிரே உள்ள தெருவில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார் அவரது வாகனத்தில் மூன்று பைகளில் 75 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மேலும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த வீட்டில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி, 80 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது. அவற்றை இருசக்கர வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்த விசாரித்தனர்.

    விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திருத்தங்கல்லைச் சேர்ந்த வெற்றிவேல் என தெரியவந்தது. போலீசார் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோன்று சிவகாசி சரஸ்வதி நகரில் நேற்றுமுன்தினம் வருவாய்த்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 950 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த திருத்தங்கல்லை சேர்ந்த ராமர் என்பவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    ×