search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரதட்சணை கொடுமை
    X
    வரதட்சணை கொடுமை

    அருப்புக்கோட்டையில் 50 பவுன் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

    அருப்புக்கோட்டையில் 50 பவுன் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக கணவர் உள்பட 4 பேர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் தீபிகா லட்சுமி (வயது 23). இவருக்கும், திருக்குமரன் நகரைச் சேர்ந்த அருண் (24) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் தீபிகா லட்சுமி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் அருணுக்கும் திருமணம் நடந்தபோது 66 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    திருமணமான முதல் நாளே எனது கணவர் மற்றும் உறவினர்கள் சங்கர் ரெட்டி, கலைச்செல்வி, முகிலன் ஆகியோர் பிரச்சனை செய்தனர்.

    தொடர்ந்து எனது கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு 50 பவுன் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்துகிறார். மேலும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் அருண் மற்றும் உறவினர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×