search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணினி பயிற்சி"

    • பெட்கிராட் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்பட்டது.
    • இந்த கணினி பயிற்சி 45 நாட்கள் நடக்கிறது.

    மதுரை

    மதுரை பெட்கிராபட் ஜி.எச்.சி.எல். இணைந்து மணப்பாறை கஸ்பா பொய்கைபட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் லவச கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை தாங்கினார்.

    ஜி.எச்.சி.எல். அலுவலர் சுஜின் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகை யில், டெக்ஸ் டைல்ஸ் வர்த்த கத்தில் லாபத்தில் ஒரு பகுதியை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கி பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கமாகும்.

    இந்த பள்ளிக்கு இன்னும் பல்வேறு உதவிகளை செய்து தர உள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் மனித வள தலைமை அலுவலர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ரோசிலின் சகாயமேரி, தலைமை ஆசிரியை லதா, உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், பெட்கிராட் பொது செயலாளர் அங்குசாமி, துணை தலைவர் மார்டின் லூதர்கிங், பயிற்சியாளர் கண்ணன், பொருளாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கணினி பயிற்சி 45 நாட்கள் நடக்கிறது.

    தினமும் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை நடக்கிறது. இதில் கணினி பயற்சிகள், டைப்பிங், எம்.எஸ்.ஆபிஸ் மற்றும் மேற்படிப்பு முதலியவை கற்று கொடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தினசரி 30 பேர் வீதம் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு
    • சிறைவாசிகளுக்கு எம்.எஸ் ஆபீஸ் பயிற்சி அளிக்கப் படவுள்ளது

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் சீர்திருத்த நடவடிக் கையாக அனைத்து மத்திய சிறைகளிலும் கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும் என சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் தெரிவித் திருந்தார்.

    அதன்படி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையுடன் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து இல்லவாசிகளுக்கான கணினி பயிற்சி மையம் நேற்று தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் விஐடிதுணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று கணினி பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    அப்போது, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இங்கு தினசரி 30 பேர் வீதம் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற் கட்டமாக சிறைவாசிகளுக்கு எம்.எஸ் ஆபீஸ் பயிற்சி அளிக்கப் படவுள்ளது.

    • பிரதான் மந்திரி கிராம டிஜிட்டல் சக்சரா அபியான் திட்டத்தின் கீழ் இலவச கணினி பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
    • ஆன்லைன் தேர்வு எழுதப்பட்டு மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படும்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், அக்கரைவட்டம் ஊராட்சியில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம டிஜிட்டல் சக்சரா அபியான் திட்டத்தின் கீழ் இலவச கணினி பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

    பயிற்சியில் கிராமப்புற மக்கள் டிஜிட்டல் மற்றும் கணினி கல்வி மேம்பாடு செய்முறை விளக்க பயிற்சி டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் தேர்வு எழுதப்பட்டு மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படும்.

    இதில் அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர், ஆர்.கண்ணையன் தலைமையேற்று கணினி பயிற்சியினை துவங்கி வைத்தார். மேலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்,

    • 2 நாள் நடந்தது
    • கணினியின் பயன்பாடு, பொது நிதி மேலாண்மை கணக்கு மற்றும் அதன் மின்னணு பரிமாற்ற முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது









    திருவண்ணாமலை:

    சென்னை மறைமலை நகர் ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனமானது திருவண்ணாமலை ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்துடன் ஒருங்கிணைந்து தென்மாத்தூரில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் திருவண்ணாமலை கோட்டத்திற்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் பணி புரியும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு 2 நாள் அடிப்படை கணினி பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சி முகாமை ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரண்யாதேவி, திருவண்ணமாலை கோட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சம்பத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்த பயிற்சியில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு , செங்கம், புதுப்பாளையம், கலசபாக்கம், போளூர், ஜவ்வாதுமலை, கீழ்பென்னாத்தூர் ஆகிய 9 ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு கணினியின் பயன்பாடு , பொது நிதி மேலாண்மை கணக்கு மற்றும் அதன் மின்னணு பரிமாற்ற முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

     இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாகவே அனைத்து கிராம ஊராட்சி கணக்குகளும் செயல்படுத்தப்படும் என்ப தால் கிராம ஊராட்சி செயலர்கள் கணினி குறித்த அறிவாற் றல் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட வள மையத்தின் பயிற்சி ஒருங்கி ணைப்பாளர் ஏசுதாஸ் வரவேற்றார்.

    ×