என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி
- பெட்கிராட் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்பட்டது.
- இந்த கணினி பயிற்சி 45 நாட்கள் நடக்கிறது.
மதுரை
மதுரை பெட்கிராபட் ஜி.எச்.சி.எல். இணைந்து மணப்பாறை கஸ்பா பொய்கைபட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் லவச கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை தாங்கினார்.
ஜி.எச்.சி.எல். அலுவலர் சுஜின் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகை யில், டெக்ஸ் டைல்ஸ் வர்த்த கத்தில் லாபத்தில் ஒரு பகுதியை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கி பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கமாகும்.
இந்த பள்ளிக்கு இன்னும் பல்வேறு உதவிகளை செய்து தர உள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் மனித வள தலைமை அலுவலர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ரோசிலின் சகாயமேரி, தலைமை ஆசிரியை லதா, உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், பெட்கிராட் பொது செயலாளர் அங்குசாமி, துணை தலைவர் மார்டின் லூதர்கிங், பயிற்சியாளர் கண்ணன், பொருளாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கணினி பயிற்சி 45 நாட்கள் நடக்கிறது.
தினமும் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை நடக்கிறது. இதில் கணினி பயற்சிகள், டைப்பிங், எம்.எஸ்.ஆபிஸ் மற்றும் மேற்படிப்பு முதலியவை கற்று கொடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.






