என் மலர்
விருதுநகர்
தொடர் மழையின் காரணமாக சதுரகிரியில் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள வழுக்குப் பாறை, சங்கிலிப்பாறை, மாங்கனி ஓடை, எலும்பு ஓடை, கருப்பசாமி கோவில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழை அந்த ஓடைகளின் வழியாக வந்து லிங்கம் கோவில் ஓடை, கலங்கரை அம்மச்சாரம்மன் கோவில் ஓடை, கல்லணை ஆறு வழியாக சென்று மகாராஜபுரம், மாத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு செல்கிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.
தொடர் மழையின் காரணமாக கண்மாய்களுக்கு தொடர்ச்சியாக நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதுடன், விவசாய பணிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கூறினர்.

சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவர் காமராஜர்புரத்தில் மோட்டார் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரிடம் முருகையாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவரது மோட்டார் சைக்கிளை ரிப்பேர் செய்ய கொடுத்துள்ளார். பின்னர் கருப்பசாமிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றுள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு விஜயகுமார் நிறுத்தி உள்ளார். பின்னர் அடுத்தநாள் காலையில் எழுந்து வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அது காணவில்லை. இது குறித்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கருப்பசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து கருப்பசாமி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர் கனமழையால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையும் முழங்கால் அளவு சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியபுளியம்பட்டி, சின்னபுளியம்பட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளம், கம்பு, சூரியகாந்தி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இங்குள்ள மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்டத்தில் விதைவிதைத்து ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். இந்தநிலையில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்தது.
இதனால் பெரியபுளியம்பட்டி மற்றும் சின்னபுளியம்பட்டி பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், நெட்டைசோளம், குட்டைசோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி அழுகத்தொடங்கியுள்ளன.
விவசாய நிலங்களுக்கு செல்லமுடியாத அளவு மழைநீர் விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. தொடர் கனமழையால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையும் முழங்கால் அளவு சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். இந்த பயிர்கள் தற்போது அறுவடை காலத்தில் மழைநீரில் மூழ்கி இருப்பது வேதனை அளிக்கிறது என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
உரம், பூச்சிக்கொல்லி என அனைத்து விலைகளும் உயர்ந்துள்ளதால் அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46, 397 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,825 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்டுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
சிவகாசி அருகே அனுமதியின்றி பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் காக்கிவாடன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 41) என்பவர் தனது பெட்டிக்கடையில் பெட்ரோலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்து பிரபுவை கைது செய்தனர்.
பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி விற்கப்பட்டு வந்தது. மூலப்பொருட்களான தீப்பெட்டி குச்சிகள், மருந்துகள், அட்டை போன்றவற்றின் விலை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரித்து உள்ளது.
விருதுநகர்:
மனித வாழ்வில் தீப்பெட்டி என்பது இன்றியமையாததாக உள்ளது. ஆனால் நவீன காலத்திற்கு ஏற்ப தற்போது எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் தீப்பெட்டியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் சிறிய அளவில் எண்ணற்ற தீப்பெட்டி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் தீப்பெட்டியை 2 ரூபாய்க்கு விலை ஏற்றம் செய்து விற்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 1ம் தேதியான இன்று முதல் தீப்பெட்டி 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இ்ந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் சதுரகிரி, சாப்டூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், வனத்துறையினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழக்கம்போல் நடைபெறக்கூடிய சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும் எனவும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை இறக்கப்பட்டது
சிவகாசி அருகே மாணவனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள என்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மகன் மைக்கேல் அஜய் (வயது 9) 5-ம் வகுப்பு படித்து வந்த இவன் கடந்த 26-ந் தேதி திடீரென மாயமானான்.
பல இடங்களில் தேடியும் அவனை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகாசி டவுண் போலீசில் ஜேசுதாஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மைக்கேல் அஜய் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீ சார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மைக்கேல் அஜய் குட்டையில் குளித்தபோது மூழ்கி இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. ஆனால் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 13 வயது சிறுவன், மைக்கேல் அஜய்யை அழைத்துச் செல்வது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதில் அவன் தான் மைக்கேல் அஜய்யை கொலை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மைக்கேல் அஜய்யுடன் 13 வயது சிறுவனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ஜேசுதாஸ் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 13 வயது சிறுவன் நீச்சல் கற்றுத்தருவதாக கூறி மைக்கேல் அஜய்யை குட்டைக்கு அழைத்துச் சென்று நீரில் மூழ்கடித்துள்ளான் என தெரிய வந்துள்ளது.

சாத்தூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி போலீசார் பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ்ந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். வேன் டிரைவராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி பிரியா(வயது28). 100 நாள் வேலைத்திட்ட வேலைக்கு சென்றதுடன் 4 ஆடுகளையும் வளர்த்து வந்தார்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது 9 வயது பெண் குழந்தை தர்ஷினி பிரியா. 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய மகன் சிவசண்முகவேல் (5). மாற்றுத்திறனாளி.
சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில் தினசரி லட்சுமி பிரியாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமி பிரியாவை சந்தேகப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை லட்சுமி பிரியா யாருடனோ போனில் பேசி கொண்டு இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லட்சுமி பிரியா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்கு சென்றார்.
அங்கு 2 குழந்தைகளையும் சேலையால் தன் உடலுடன் கட்டிக்கொண்டு காலில் கல்லை கட்டி கொண்டு கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த லட்சுமிபிரியாவும், 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டனர்.
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி முருகன் கோவிலில், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதானமாக உள்ளது. இதன் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.
இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதையொட்டி அதன் சேவை நிறுத்தப்படும். அதன்படி இன்று (திங்கட்கிழமை) பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அதன் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயிலை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம். மேற்கண்ட தகவல், கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...ஒமிக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல் - வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு இஸ்ரேல் தடை
அருப்புக்கோட்டை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்த போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்படி, துணை சூப்பிரண்டு சகாயஜோஸ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து, போலீஸ்காரர்கள் செல்வக்குமார், பரமசிவம், சிவக்குமார், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படையும், காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார்கள் சிவபாலன், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் காந்திநகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரை சோதனை செய்தபோது அதில் 6 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது.
இதன் அடிப்படையில் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் கஞ்சநாயக்கன்பட்டி கோபிகண்ணன் (வயது 30), ராஜபாளையம் சம்பத் குமார் (51), திருமங்கலம் மகேஸ்வர்மா (27), அஜய்சரவணன் (29), மதுரையைச் சேர்ந்த அலெக்ஸ்குமார் (36), மூர்த்தி (34) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கார் தான் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ரூ.88 ஆயிரம், 2 பவுன் தங்க நகை, கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஏட்டு இளங்குமரன் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.
அவர் கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தான் கணேசன் வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்து விட்டதால் கணேசன் தனியாக வசிப்பதை அறிந்த இளங்குமரன், தனது சகோதரர் சம்பத்குமாரிடம் தெரிவித்து கும்பலாக வந்தால் நகை, பணம் கொள்ளையடிக்கலாம் என திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
அதன் பேரில் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான சம்பத்குமார் உள்பட 6 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.
கைதான அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தது.