search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் பாதிக்கப்பட்ட பயிரை விவசாயி காண்பித்தபோது எடுத்த படம்.
    X
    மழையால் பாதிக்கப்பட்ட பயிரை விவசாயி காண்பித்தபோது எடுத்த படம்.

    மழைநீரில் மூழ்கி பயிர்கள் நாசம்- விவசாயிகள் கவலை

    தொடர் கனமழையால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையும் முழங்கால் அளவு சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியபுளியம்பட்டி, சின்னபுளியம்பட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளம், கம்பு, சூரியகாந்தி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

    இங்குள்ள மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்டத்தில் விதைவிதைத்து ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். இந்தநிலையில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்தது.

    இதனால் பெரியபுளியம்பட்டி மற்றும் சின்னபுளியம்பட்டி பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், நெட்டைசோளம், குட்டைசோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி அழுகத்தொடங்கியுள்ளன.

    விவசாய நிலங்களுக்கு செல்லமுடியாத அளவு மழைநீர் விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. தொடர் கனமழையால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையும் முழங்கால் அளவு சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

    ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். இந்த பயிர்கள் தற்போது அறுவடை காலத்தில் மழைநீரில் மூழ்கி இருப்பது வேதனை அளிக்கிறது என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

    உரம், பூச்சிக்கொல்லி என அனைத்து விலைகளும் உயர்ந்துள்ளதால் அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×