என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. கடத்தல்காரர்கள் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி அதனை ஆலைக்கு அனுப்பி பாலிஸ் செய்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.
சில நேரங்களில் ரேசன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து, வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு காரியாபட்டி-மதுரை ரோட்டில் உள்ள மல்லாங்கிணறு-வலையங்குளம் சந்திப்பில் உணவு கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின்பிரைட் மேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்தபோது 63 மூட்டைகளில் 2 ஆயிரத்து 835 கிலோ ரேசன் அரிசி (சுமார் 2¾ டன்) மதுரைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மினி வேன், அரிசியை பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த 3 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில், அவர்கள் மதுரை காமராஜர் தெருவை சேர்ந்த பாண்டி (24), ஆறுமுகம் (32), முனீஸ்வரன் (23) என தெரிய வந்தது. இவர்கள் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி மதுரையில் உள்ள ஆலைக்கு கடத்தி வந்துள்ளதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
விருதுநகர் அருகே உள்ள எம்.ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகள் சோலைமீனா (வயது 20). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி பள்ளியில் 2-வது ஆண்டு படித்து வந்தார். பயிற்சிப்பள்ளியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இவரும், சாத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பிரவீன் குமார் எலக்ட்ரீசியன் ஆவார்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் சோலை மீனா தனது ஊர் அருகே உள்ள பட்டம்புதூர் ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு திடீரென பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த காதலன் பிரவீன்குமார் மனவேதனை அடைந்தார். இந்தநிலையில், விருதுநகர் வேலுச்சாமி நகர் அருகில் உள்ள தண்டாவளம் பகுதிக்கு சென்று குருவாயூரிலிருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பிரவீன்குமார் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீயும் (சோலை மீனா), நானும் சேர்ந்து வாழ முடியவில்லை. சாகவும் முடியவில்லை. ஏன் என்னை விட்டுச் சென்றாய்?. நீ இல்லாத இவ்வுலகில் நான் மட்டும் எப்படி வாழ்வேன்?
என்னை மன்னித்துவிடு. தற்கொலைக்கு முக்கிய காரணம் மீனா பணியாற்றிய தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 3 பேர் தான் (இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்). அவர்கள்தான் எங்கள் சாவுக்கு முழுக்க காரணம். எங்களை வாழ விடாமல் பிரித்தார்கள். எங்களை சாவில் எப்படி பிரிப்பார்கள் என்று பார்ப்போம்? அடுத்த பிறவியிலாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு கடவுள் துணை இருக்கட்டும். என் மீது உண்மையான அன்பு வைத்த அனைவருக்கும் நன்றி.
இப்படிக்கு பிரியாவிடையுடன் பிரவீன் குமார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், விருதுநகர் மேலதெருவை சேர்ந்த ஹரிகரனும் காதலித்து வந்தோம்.
சம்பவத்தன்று பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து கிடங்கிற்கு என்னை ஹரிகரன் அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார். இதை ஏற்று நானும் அவரது ஆசைக்கு இணங்கினேன்.
நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை ஹரிகரன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். சிறிது நாட்களில் அந்த வீடியோ குறித்த விவரம் தெரியவந்தது.
அதனை அழிக்காமல் நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார். அப்போது தான் ஹரிகரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என தெரியவந்தது.
ஹரிகரனின் மிரட்டலால் அவர் அழைத்தபோதெல்லாம் சென்றேன். இந்த நிலையில் அவர் அந்த வீடியோவை அவரது நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர்களும் அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டினர். இதில் மாடசாமி என்பவர் எனது வீட்டிற்கே வந்து தாயாரிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டினார். தொடர்ந்து மாடசாமி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் அந்த வீடியோவை வைத்துக்கொண்டு மாரி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோரும் பலமுறை மிரட்டி உறவு கொண்டனர். இவர்களது மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஹரிகரன், மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இதன் அடிப்படையில் பாண்டியன் நகர் போலீசார் 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தனது காதலியை காதலன் நண்பர்களுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்தியில் 80 சதவீத பங்கு பேரியம் நைட்ரேட்டுக்கு உள்ளது.
குறிப்பாக சரவெடி பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் மிக முக்கிய தேவையாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பட்டாசு தயாரிப்பு சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் 90 சதவீதம் சரவெடிகள் தான் தயாரிக்கப்படுகின்றன.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இந்த ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டும்.
பேரியம் நைட்ரேட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) அறிவித்தது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) இந்த சங்கத்திற்குட்பட்ட பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தை தொடங்கின. சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் இங்கு வேலை பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டால் பலவித பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டும் அவை புழக்கத்தில் உள்ளது.
ஆனால் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு செய்யாத சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட்டுக்கு தடை விதித்து இருப்பது பட்டாசு தொழிலை முடங்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.
உலகில் வேறு எங்கும் தடை இல்லாத நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டாசு தொழிலை முடக்க முயற்சிக்கும் மத்திய-மாநில, மாவட்ட நிர்வாகங்களை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி:
காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப் பொருளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனை நீக்க வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு கேட்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தபோவதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டாப்மா) அறிவித்தது.
இந்த சங்கத்திற்குட்பட்ட பட்டாசு ஆலைகள் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை செவல்பட்டி, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இங்கு 90 சதவீத சரவெடிகள் மட்டும் தயாரிக்கப்படுகின்றன.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (21-ந் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க தலைவர் காத்த லிங்கம் அறிவித்துள்ளார்.






