search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி ஆண்டு விழா"

    • நற்கருைண நாதர் ஆலய பங்குதந்தை ஜெபாஸ்டின் மரிய சுந்தரம் கலந்து கொண்டனர்.
    • சுற்றுச்சூழலை மையப்படுத்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கயம் சாலை செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விவசாய தொழில் முன்னேற்ற அமைப்பு இயக்குனர் சோமசுந்தரம் மற்றும் நல்லூர் நற்கருைண நாதர் ஆலய பங்குதந்தை ஜெபாஸ்டின் மரிய சுந்தரம் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற 3 மாணவிகள், மேலும் தரவரிசை மதிப்பீடு பெற்ற 12 மாணவிகள் மற்றும் கல்வி, விளையாட்டில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசு , சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழலை மையப்படுத்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு டி.ஐ.ஜி. பரிசுகள் வழங்கினர்.
    • செல்போன் பார்த்துக் கொண்டே நம்மை நாமே சுருக்கி கொள்ள கூடாது என அறிவுரை.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியின் 28ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா உள்ளரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எம்.விமல்சந்த் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகிகள் கே.ராஜேஷ்குமார், எம்.சுதர்சன்குமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியை ஏ.சுமைரா அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் சிவகுமார், கல்லூரி செயலாளர் சி.லிக்மிசந்த் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். முதல்வர் எம்.இன்பவள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் டிஐஜி ஆனிவிஜயா கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய உலகில் கல்வி மட்டுமே அழிக்க முடியாத செல்வம். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற சக்தி வாய்ந்த ஓரே ஆயுதமாக கல்வி உள்ளது. அதனை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    உங்கள் முன்னேற்றத்துக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பக்க பலமாக உள்ளனர். மாணவிகள் பெற்றோர்களுக்கு நல்ல மகளாக இருக்க வேண்டும். இன்றைய இணைய உலகத்தில் செல்போன் மட்டும் குனிந்து பார்த்துக் கொண்டே நம்மை நாமே சுருக்கி கொள்ள கூடாது.

    நம்மை சுற்றி நடைபெறும் அனைத்தையும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு தெரிந்துக் கொண்டு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன.

    உங்களுக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சனைகளையும் காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம். உங்களை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையும் என்றும் உறுதுணையாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பிற்பகலில் பின்னணி பாடகி அல்காஅஜித், திரைப்பட நடிகையும், தொகுப்பாளருமான ஷாலினிவேகா ஆகியோர் தலைமையில் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் ஆம்பூர் தக்க்ஷிலா பள்ளி செயலாளர் ஆனந்த்சிங்கவி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா நன்றி கூறினார்.

    ×