என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் பட்டியலில் பட்டாசு சேர்க்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டப்பபாடுகள் விதிக்கப்பட்டதால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதிக சத்தத்தை வெளியிடும் சரவெடி, பேன்சிரக பட்டாசுகளுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதனால் சிவகாசியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் முழுமையாக செயல்படவில்லை.
இந்தநிலையில் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் பங்கேற்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், பட்டாசு சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பட்டாசு ஆலைகளை திறக்குமாறும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி பட்டாசு தொடர்பான வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது.
அதில் சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது.
வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த 22 வயது பட்டியலின இளம்பெண் மாணவர்கள் உள்பட சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மனதை விட்டு மறைவதற்குள் இந்த சம்பவம் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், துணை சூப்பிரண்டு அர்ச்சனா ஆகியோர் அதிரடி விசாரணை நடத்தினர்.
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹரிஹரன், தி.மு.க.வைச் சேர்ந்த ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 9, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் உள்பட 4 பேர் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறை காவலில் வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் விருதுநகர் சமூக நலத்துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இளம்பெண்ணிடம் காதல் ஆசை காட்டி ஹரிஹரன் தான் முதலில் பழகியுள்ளார். அவர் அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்துள்ளார். அதன்பிறகு அதனை காட்டியே அடிக்கடி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும், நண்பர்களுக்கு வீடியோவை அனுப்பி அதன் மூலம் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத் காரம் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்தன.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஜீனத் அகமதுவை கட்சியில் இருந்து நீக்கி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டார். மேலும் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுவதாக சட்டசபையில் அவர் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு முத்தரசி நியமிக்கப்பட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வினோதினி, விருதுநகர் சென்று விசாரணை விவரங்களை கேட்டார். அவரிடம் விருதுநகர் துணை சூப்பிரண்டு அர்ச்சனா வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார்.
கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டன.
இன்று காலை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு முத்தரசி விருதுநகர் வந்தார். அவர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடங்கினார். கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார். அவரை தனி இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார். அடுத்த கட்டமாக வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்திகோயில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் வசித்த மூக்கன் என்பவரது மகன் ஈஸ்வரன் (வயது 22) இவரது தாய்-தந்தை உயிரிழந்த நிலையில் தனியாக அந்த பகுதில் உள்ள உறவினர்களிடம் உணவு சாப்பிட்டு வந்தார்.
மேலும் இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு இவர் மது அருந்திவிட்டு அந்தப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறக்கினர்.
பின்னர் மீண்டும் அந்த வாலிபர் அந்தப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறினார். இதில் மின்சாரம் தாக்கி ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கூமாபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






