என் மலர்
உள்ளூர் செய்திகள்

திடீர் ஆய்வு,
அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அடிப்படை வசதிகள் குறித்து சேர்மன் திடீர் ஆய்வு செய்தார்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பேரூராட்சி 15வார்டுகள் கொண்டது. இந்த பேரூராட்சியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை மற்றும் குடிநீர் வசதி, வாறுகால் வசதி ஆகியவை குறித்து புதுப்பட்டி பேரூராட்சி சேர்மன் சுப்புலட்சுமி சாந்தாராம் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு பணியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என சேர்மன் உறுதியளித்தார்.
ஆய்வின்போது வ.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சிவஅருணாச்சலம், பேரூர் செயலாளர் சாந்தாராம், பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Next Story






