என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பட்டாசு ஆலை
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் வாபஸ்- உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் பட்டியலில் பட்டாசு சேர்க்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டப்பபாடுகள் விதிக்கப்பட்டதால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதிக சத்தத்தை வெளியிடும் சரவெடி, பேன்சிரக பட்டாசுகளுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதனால் சிவகாசியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் முழுமையாக செயல்படவில்லை.
இந்தநிலையில் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் பங்கேற்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், பட்டாசு சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பட்டாசு ஆலைகளை திறக்குமாறும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி பட்டாசு தொடர்பான வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது.
அதில் சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது.
வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story