என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகள் தாக்குதல்.
    X
    அதிகாரிகள் தாக்குதல்.

    அதிகாரிகளை தாக்க முயன்றதாக புகார்

    ராஜபாளையத்தில் சொத்துவரி நோட்டீசு கொடுக்க சென்ற அதிகாரிகளை தாக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
    ராஜபாளையம்

     ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் அருகே ஒரு சமுதாய பொதுபண்டுக்கு பாத்தியப்பட்ட 150கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு 4ஆண்டுகாலமாக சொத்துவரி கட்டவில்லையாம். 

    மொத்தம் ரூ. 11லட்சத்திற்கும் மேல் வரி பாக்கி உள்ளது. பலமுறை கட்டுமாறு கோரியும் எந்த  நடவடிக்கையும் இல்லை. அவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வரிகட்ட இயலவில்லை என பதில் கூறினர். 

    இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் சம்பளத்தில் அந்த சொத்துவரி பாக்கி பிடித்தம் செய்ய உயர் அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். 

    எனவே நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பொதுப் பிரிவு ஊழியர்கள் அந்த கடைக்காரர்களுக்கு நோட்டீசு கொடுப்பதற்காக சென்றனர். 

    அப்போது நகராட்சி அதிகாரிகளிடம் கடைக்காரர்கள் வாக்குவாதம் செய்துதாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

     போலீசார் விரைந்து வந்து பூட்டப்பட்டிருந்த வணிகவளாக கதவை திறந்து உள்ளே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. இரு தரப்பினரையும் சமரசம் பேசி நாளை (இன்று) சொத்துவரி பாக்கியை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பேரில், நகராட்சி அதிகாரிகள் கலைந்துசென்றனர். 

    இதற்கிடையே தங்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும், பணியின்போது தாக்க முயற்சித்ததாகவும், அவர்கள்மீது நடவடிக்கை கோரியும் ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் நகராட்சி அதிகாரிகள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×