search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற “பி.டி.உஷா அணி” வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
    X
    பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற “பி.டி.உஷா அணி” வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழா

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 21-வது ஆண்டு விழா நடந்தது.
    சிவகாசி

     சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 20 மற்றும் 21-வது விளையாட்டு விழா நடந்தது.  கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று, தேசியகொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர் குளோரி டார்லிங் மார்க்ரெட் ஒலிம்பிக் கொடியை ஏற்றி  வைத்தார். 

    துணை முதல்வர் பாலமுருகன் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்பு விருந்தினர் குளோரி டார்லிங் மார்க்ரெட் விளையாட்டு விழாவினை தொடங்கி வைத்து ஒலிம்பிக்ஜோதியை ஏற்றினார்.  வணிகவியல் துறை மாணவி சந்தியா விளையாட்டு விழாவிற்கான உறுதி மொழியை வாசித்தார். 

    அதனை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் ஏரோபிக் நடனம், மாணவிகள் நடனம், சிலம்பம், பிரமிடு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.  உடற்கல்வித்துறை இயக்குநர்  அய்யல்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். 

    நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர் குளோரி டார்லிங் மார்க்ரெட் தினமும் 30 நிமிடமாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். கோபம் அறிவை குறைக்கிறது. எனவே கோபத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.
     
    பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் சுசில்குமார் அணியும், பெண்கள் பிரிவில் பி.டி.உஷா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தன. தனிப்பட்ட வெற்றியாளராக ஜான் பிரிட்டோவும், சுரபிஸ்ரீயும் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.
    Next Story
    ×