என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டம்
கிராம சபை கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உலக தண்ணீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நாளை (-22ந்தேதி) 17 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய் யப்பட்டு வருகிறது. 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என்று முறையாக அறிவிக்க உலக தண்ணீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும்.
சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் கிராம ஊராட்சிகள் வருமாறு:-
அருப்புக்கோட்டை- சுக்கிலநத்தம், வெள்ளையாபுரம். காரியாபட்டி-குரண்டி, நரிக்குடி- இலுப்பையூர், வத்திராயிருப்பு-ஆயர்தர்மம், கல்யாணிபுரம். வெம்பக்கோட்டை-இ.டி.ரெட்டியபட்டி, குகன்பாறை, கொங்கன் குளம், முத்தாண்டியாபுரம்,- புலிப்பாறைப்பட்டி. விருதுநகர்-சின்னவாடி, கோட்டையூர், முத்துலாபுரம், -நக்கலக்கோட்டை, நல்லம நாயக்கன்பட்டி, செங்குன்றாபுரம்.
மேற்கண்ட கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story






