என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்தஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    • இவருக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துமகேசுவரன்(35). இவர் 2005-ம் ஆண்டு ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள 10-வது என்ஜினீயர் ரெஜிமெண்டில் ஹாவில்தா ராக பணியாற்றினார்.

    ராணுவவீரர் முத்து மகேசுவரனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உடல் ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு முத்துமகேசுவரன் உடலுக்கு ராணுவ அதி காரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராணுவவீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மரணமடைந்த ராணுவவீரர் முத்துமகே சுவரனுக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    • அருப்புக்கோட்டையில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    அருப்புக்கோட்டை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக ரேஷன் அரிசி கடத்துவதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கணேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய மதுரையை சேர்ந்த ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கடத்தல் ரேசன் அரிசி மூட்டை அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதாக கொண்டு செல்லப்பட்டது என கைதான ராமமூர்த்தி தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • எஸ்.ராமலிங்காபுரம் செல்லும் சாலையில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் இணைப்பு சாலையாக இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ளது முதுகுடி இங்கு சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் முதுகுடியில் இருந்து எஸ்.ராமலிங்காபுரம் செல்லும் சாலையில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.இந்த சாலை ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் இணைப்பு சாலையாக இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதராமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்ட போலீசார், அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து 9 மணி அளவில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விபத்தில் காயமடைந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உதவினார்.
    • குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமிகோவில் தெருவில் நீதி மன்றம் அருகே உள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பவித்ரா லட்சுமி, ரன்விதா, ராஜேஷ், கார்த்திகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    அவர்கள் கூறுகையில், 5 மாதங்களுக்கு முன்பு சிவகாசி செல்லும்போது குடும்பத்துடன் விபத்துக்கு ள்ளாகி சிகிச்சை பெற்றோம். தற்போது குழந்தையின் மேல்சிகிச்சைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைகேட்ட தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உடனடியாக தனது சொந்த செலவில் ரூ.15 ஆயிரத்தை வழங்கியதுடன் டாக்டரிடம் பேசி உயர்ரக மருத்துவ சிகிச்சையை குழந்தைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, வார்டு செயலாளர்கள் குழந்தைவேலு, இக்சாஸ், மாயாவி, மதன் ராம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சிறப்பாக பணி புரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான நவம்பர் மாதத்திற்கான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை நடந்தது.

    இதில் சிறப்பாக பணி யாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் லோகநாதனுக்கு 2-ம் பரிசும், முன்னாள் ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் சீனிவாசனுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி)சாத்தூர் தனி வட்டாட்சியர்நா.சீதா லட்சுமிக்கு முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்திக்கு 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவண க்குமாருக்கு முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி க்கு 2-ம் பரிசும், காரியா பட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி க்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்ட த்துணை ஆய்வாளர் மாரிமுத்துக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்டத்துணை ஆய்வாளர் கார்த்தி கேயனுக்கு 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜாவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார் ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்ட சார் ஆய்வாளர் கணேசன், ராஜபாளையம் வட்ட குறுவட்ட அளவர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிசெல்வி, சாத்தூர் வட்ட குறுவட்ட அளவர் ராதா ருக்குமணி ஆகியோருக்கு 3-ம் பரிசும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மாநில அளவிலான 38-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி 3-வது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. சாதனை படைத்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளியின் செயலர், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்தினர்.

    • பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நல்லாட்சி வாரம் நடக்கிறது.
    • அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    "பிரஷாசன் காவ்ன் கி அவுர் - PRASHASHAN GAON KI AUR - 2022" என்ற தலைப்பில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்கும், நாடு தழுவிய பிரச்சாரம் நாளை (19-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை "நல்லாட்சி வாரமாக"(Good Governance Week) நடக்கிறது. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கும், சேவைகள் வழங்குவதற்கும் சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மேற்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

    இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம். மேலும் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாரம்பரிய கலை விழா நடந்தது.
    • ஆசிரியை சுமதி, மாணவி முத்து ஜீவனா ஆகியோர் பாரம்பரிய கலைகளை பற்றி எடுத்துரைத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தமிழரின் பாரம்பரிய கலை விழா நடந்தது. தமிழர்களுக்கே உரித்தான ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் இன்னர்வீ=ல் சங்க தலைவி சத்யா குப்புசாமி, ரோட்டரி சங்க தலைவி டாக்டர்.ராதா ஆகியோர் பங்கேற்றனர். மாணவி பிரதீபா வரவே

    பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், துணை நிர்வாகி அரவிந்த் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுமதி, மாணவி முத்து ஜீவனா ஆகியோர் பாரம்பரிய கலைகளை பற்றி எடுத்துரைத்தனர். மாணவர்களின் குழு நடனம் நடந்தது. மாணவி செல்வபிரியா நன்றி கூறினார்.

    • தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • சிவகாசி தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அனந்தன் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கம். இவரது மகன் பாண்டி முருகன் (வயது 23) என்பவர் 500 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இவர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கிடை அமைத்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது சாத்தூர் அருகில் உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் கிடை ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு சின்னகாமன்பட்டி காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற சில ஆடுகள் திரும்ப வராததால் அப்பகுதியில் பாண்டி முருகன் தேடி அலைந்து உள்ளார்.

    காணாமல் போன 50 ஆடுகளை கண்டு பிடித்து மீண்டும் கிடை போட்ட இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சின்னக்காமன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாத்தூர்-சிவகாசி சாலையை ஆடுகள் கடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து ஆடுகள் மீது மோதியது. இதில் ஏராளமான ஆடுகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் பலத்த காயம் அடைந்த 21 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.

    தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிவகாசி தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அனந்தன் (43) இவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுபட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி அரங்க நாயகி (வயது 19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்திற்காக புதுபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிறந்த குழந்தை மற்றும் தாய் அடுத்தடுத்து இறந்ததால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாய் மற்றும் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • ராஜபாளையம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன.
    • யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

     ராஜபாளையம் 

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்ல பிள்ளை ஊரணி அருகே ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்தன.

    அவை அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தியது. அதே போல் அந்த பகுதியில் இருந்த பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்று களும் யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • இந்த கூட்டத்தில் துணி நூல் ஆணையர்-கலெக்டர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி தொடர்பான வாய்ப்புகள் குறித்தும் ஜவுளி தொழில் முனை வோர்களிடையே விழிப்பு ணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார்.

    இதில் துணி நூல் ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கி பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் இ.குமாரலிங்காபுரத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. தமிழ்நாடு அரசு துணி நூல் துறையின் மூலம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை வளப்படுத்தும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்கான ஆலோச னைகளை தொழில்முனை வோர்கள் வழங்கலாம்.தமிழ்நாட்டை ஜவுளி துறையில் முக்கியமாக தொழில்நுட்ப ஜவுளித்துறையை வளர்ச்சி அடைய செய்திட கடந்த மாதம் சென்னையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட International Technical Textile - Conference இதற்கு ஒரு உதாரணமாகும்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உகந்த இடமாக இருப்ப தற்காகவும், அதிக அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், ஜவுளி உற்பத்தியை பெருக்கி, உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக வும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணி நூல் இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ், மண்டல துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×