என் மலர்
விருதுநகர்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப் பலகை இலக்கிய மன்றமும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மகாராசபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியருமான ஜான்சன் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்கள் அனுபவத்தைப் பள்ளியில் படிக்கும் போதே பெறுகின்றனர். கல்லூரியில் படிக்கும் போது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.
படிக்கும்போதே வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வி என்பதை உணர்ந்தே படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே போட்டித்தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் தங்கள் நேரத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் செலவழிக்காமல் போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கர் வரவேற்றார். துறைத்தலைவர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார். இதில் தமிழியல் துறையைச் சேர்ந்த 78 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதுகுதண்டு அறுவை சிகிச்சை நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 29). இவர் கடந்த 7-ந்தேதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் .
அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டுள்ளதை அறிந்த டாக்டர்கள் முதன் முறையாக ராஜ பாளையம் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தனர். இதை வெற்றி கரமாக செய்துமுடித்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
தற்போது மாரியப்பன் நலமாக உள்ளார். அறுவை சிகிச்சை நடைபெற்றதை அடுத்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதில் தலைமை மருத்துவர் மாரியப்பன், மருத்துவர் சுரேஷ், திருமுருகன், சேத்தூர்சேர்மன் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன், கருப்பழகு, தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்கு வரத்து காவல்துறை, காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடை பெற்றது.
இதையொட்டி ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேருசிலையில் இருந்து இருசக்கர வாக னங்களில் போலீசார், சமூக ஆர்வலர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் அணிவகுத்து சென்றனர். வழிநெடுகிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.
முடிவில் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியும் நடைபெற்றது.இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ராஜபாளை யம் டி.எஸ்.பி. பிரீத்தி, ஊர்காவல் படை மன்டல தளபதி ராம்குமார்ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராஜா, லட்சுமணன், லாவண்யா ஆகியோர் ஓவியங்களை பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள், போலீசார் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 20 பேருக்கு பரிசுகள், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. காவலர் வாய்ஸ் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது சமூக சேவகர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கடைப் பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் குறித்து ஆய்வாளர் லாவண்யா மற்றும் மூத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் விரிவாக பேசி னர். மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகை யில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசினார்.
முடிவில் காவலர் வாய்ஸ் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- அன்னப்பராஜா பள்ளிக்கு மேம்பாட்டு வசதிகள் வழங்கும் விழா நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுமார், வியாஷ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் ரூ.50 லட்சத்தில் இசைக்கருவிகள், உடற்பயிற்சிக் கருவிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, இண்ட்ராக்ட் டச் பேனல்கள், டேபிள் டென்னிஸ் போர்டு, மாணவியர் ஓய்வறைத் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினர்.
அவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது. ரோட்டரி அமைப்பின் தலைவர் குமார் ராஜா வரவேற்றார். பள்ளிச்செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ராஜவேல், பாஸ்கரன், விசுவநாதன், முன்னாள் மாவட்ட பொது செயலர் மாரிமுத்து, முருகதாஸ், ராமசுப்பிரமணிய ராஜா, வள்ளிநாயகம் என்ற கார்த்திக், ஆறுமுகச்செல்வன், தினேஷ்பாபு ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி அமைப்பின் தென்மண்டல ஆளுநர் வி.ஆர்.முத்து பங்கேற்று "பெண்களே நாட்டின் கண்கள், கல்வியும் கடின உழைப்பும் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்" என்று பேசினார். தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுமார், வியாஷ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- திராவிட வேதம் என்று அழைக்கப்படுவது நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
- ஆண்டாள் சந்நிதியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் திருப்பாவை பாசுரங்கள் விண்ணப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள ஆடிப்பூர மண்ட பத்தில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம், தமிழ்நாடு இசை கல்லூரியை சேர்ந்த 84 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட 'நாதம்- 108' குழு சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் இசையுடன் பாடப்பட்டது.
தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக துணை வேந்தர் சவுமியா, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் முத்துராஜா, ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சி தலைவர் ரவி கண்ணன், ஒன்றிய தலைவர் மல்லி ஆறுமுகம், சுந்தரேஸ்வரி, கல்வியல் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது கூறியதாவது:-
ஆண்டாள் சந்நிதியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடும் வாய்ப்பு கிடைத்தது இசைக்கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பான ஒன்று. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் வகுத்த இசைக் கச்சேரி முறையை பின்பற்றி நமது குழந்தைகள் அழகாக திருப்பாவை பாடினார்கள். தேனினும் இனிய தமிழ் பாடல் கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம் திராவிட வேதம் என போற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த அயன்கொல்லமா் கொண்டான் முத்தையா கோவில் தெருவை சேர்ந்தவர் பெத்தப்பன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 38). இவர் ராஜ பாளையம் பழைய பஸ் நிலையம் அருகில் செயல்படும் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை இசக்கி யம்மாள் வேலை முடிந்து ராஜபாளையம் பஸ் நிலை யத்தில் டவுன் பஸ்சில் ஏறி அயன்கொல்லமா் கொண்டான் சென்றார். அப்போது மர்ம நபர் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கியம்மாள் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்.
- நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
- துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பஞ்சவர்ணம் (வயது40). இவரிடம் ஒரு பெண் பழம் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு போல் இருந்துள்ளது. இதனால் வேறு ரூபாய் நோட்டை தருமாறு பஞ்சவர்ணம் கூறியுள்ளார்.
உடனே அந்த பெண் முதலில் கொடுத்த 500 ரூபாயாயை வாங்கி கொண்டு வேறு ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை இரண்டும் கள்ளநோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பழம் வாங்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புதாய் (56) என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள துரைச்செல்வி என்பவரின் மகள் பெற்ற தொகையிலிருந்து இந்த நோட்டை எடுத்து வந்து பழம் வாங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து வேண்டுராயபுரத்தில் உள்ள துரைசெல்வியின் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக சுப்புதாயை போலீசார் கைது செய்தனர். துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரைசெல்வி கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சில நபர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.
கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
- 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் வருகிற 28-ந் தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் 100-க் கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய வர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்று களின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மாணவர்களுக்கான ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடநத்து.
- இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான ஊக்கமூட்டும் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக சென்னை ''காட் இந்தியா டிரஸ்ட்'' முரளிஜி சுவாமி கலந்து கொண்டு பேசினார்.
முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சுவாமியின் சீடர்களான லலிதா, பவானி, சாந்தி, சந்திரபிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
- பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்டப்பணிகள்
தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.
பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய கூட்டம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், கோவில்பட்டி கம்பன் கழகமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலக்கியக் கூட்டம் நடந்தது.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கம்பன் கழக உறுப்பினர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதா ஜவஹர் ''கம்பன் நம் தோழன்'' என்ற தலைப்பிலும் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் தங்கசாமி ''கம்பனில் அறம்'' என்ற தலைப்பிலும், கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சகுந்தலா ''கோசலையும் சுமித்திரையும்'' என்ற தலைப்பிலும் பேசினர்.
தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி மகேசுவரி நன்றி கூறினார். இதில் காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் 800 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.
- விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- அயன்கொல்லங் கொண்டான் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வரும் மாதத்திலேயே இந்த பகுதியிலும் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங் கொண்டானில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று மற்றும் பண்ணைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று, பண்ணைக்கருவிகளை வழங்கினர்.
இதில் எம்.எல்.ஏ பேசுகையில், விவசாயிகளின் நலன் காக்கும் அரசு நமது தமிழக அரசு. அதனால்தான் முதல்-அமைச்சர் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை நடைமுறை படுத்திவருகிறார்.ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஆட்சியில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டது. தற்போது 7 இடங்களில் செயல்படுகிறது.
அயன்கொல்லங் கொண்டான் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வரும் மாதத்திலேயே இந்த பகுதியிலும் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் திருமலைச்சாமி, வேளாண்மை துறை அதிகாரி தனலட்சுமி, கிளை செயலாளர் நடராஜன், சிவா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.






