என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாரின் விழிப்புணர்வு பேரணி நடந்தபோது எடுத்த படம்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்கு வரத்து காவல்துறை, காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடை பெற்றது.
இதையொட்டி ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேருசிலையில் இருந்து இருசக்கர வாக னங்களில் போலீசார், சமூக ஆர்வலர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் அணிவகுத்து சென்றனர். வழிநெடுகிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.
முடிவில் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியும் நடைபெற்றது.இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ராஜபாளை யம் டி.எஸ்.பி. பிரீத்தி, ஊர்காவல் படை மன்டல தளபதி ராம்குமார்ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராஜா, லட்சுமணன், லாவண்யா ஆகியோர் ஓவியங்களை பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள், போலீசார் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 20 பேருக்கு பரிசுகள், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. காவலர் வாய்ஸ் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது சமூக சேவகர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கடைப் பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் குறித்து ஆய்வாளர் லாவண்யா மற்றும் மூத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் விரிவாக பேசி னர். மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகை யில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசினார்.
முடிவில் காவலர் வாய்ஸ் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.






