ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த அயன்கொல்லமா் கொண்டான் முத்தையா கோவில் தெருவை சேர்ந்தவர் பெத்தப்பன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 38). இவர் ராஜ பாளையம் பழைய பஸ் நிலையம் அருகில் செயல்படும் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை இசக்கி யம்மாள் வேலை முடிந்து ராஜபாளையம் பஸ் நிலை யத்தில் டவுன் பஸ்சில் ஏறி அயன்கொல்லமா் கொண்டான் சென்றார். அப்போது மர்ம நபர் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கியம்மாள் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com