என் மலர்
விருதுநகர்
- ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்று விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
- ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள தேசிய வன காப்பகத்தில் கடந்த வாரம் 19 காட்டுப்பன்றிகள் இறப்பு ஏற்பட்டு அதன் உடல்களை பரிசோனை செய்து ஆய்வுக்கு அனுப்பி யதில் அவை அனைத்தும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் மூலம் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட வனத்துறையினரிடம் இது தொடர்பாக தொடர்பு கொள்ளப்பட்டு வனக்காப்பக எல்கைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பயிர்களை சாப்பிட வரும் காட்டு பன்றிகளை கண்கா ணிக்கவும், ஏதேனும் இறப்பு நேர்ந்தால் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை எவ்வித காட்டுப் பன்றிகளும் நோய் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் இல்லை. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் ஏதேனும் நோய் தாக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதில் விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித தாக்கமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் விருதுநகர் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொ ள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றி களுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடை பாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நி யர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.
எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை. சுகாதாரமான முறையில் கிடைக்கப்பெறும் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியம். கால்நடை பராமரிப்புத்துறையினர் பன்றி ப்பண்ணை யாளர்களுக்கு தொடர்ந்து தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கு வதோடு பண்ணைகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிராமிய கலைப்போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி மணி நகரில் உள்ள சிதம்பர ஆறுமுகசாமி திருமண மண்டபத்தில் பாரதி இலக்கிய சங்கம், பசுமை தாயகம், மக்கள் தொலைக்காட்சி, மதி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து கிராமிய திருவிழாவை 4 நாட்கள் நடத்தியது. இதையொட்டி நடந்த போட்டிகளில் 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் 15 பேர் பங்கேற்றனர்.அதில் 8 பேர் பரிசு பெற்றனர். இதில் குறும்படம் முதல் பரிதை வென்றது. இந்த குறும்படம் ''மனிதமும் மண்ணும்'' என்ற தலைப்பில் கோவில் அர்ச்சகருக்கு ரூ.500 கொடுத்து வழிபாடு செய்யும் நாம் குப்பை பொறுக்கும் ஏழைகளுக்கு ரூ.5 கொடுக்க தயங்குவது ஏன்? என்ற கருத்து இடம் பெற்றிருந்தது.
பரிசு பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, குழுமத்தின் இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், கல்லூரி இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் பேராசி ரியர்கள் பாராட்டினர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் எழுந்தருள்வார்.
- இரவு தங்க தோளுக்கினியானில் புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
வைணவ திவ்ய தேசங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் பெருமாள் மோகன அலங்காரத்தில்(நாட்சியார் திருக்கோலம்) எழுந்தருள்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் எழுந்தருள்வார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரங்க மன்னாரை கரம் பிடித்தார். அதனால் இங்கு நடைபெறும் எண்ணெய் காப்பு உற்வசத்தில் கள்ளழகர், கண்ணன், பெரிய பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் காட்சி அளிப்பார்.
அதன்படி நேற்று 5-ம் நாள் எண்ணெய் காப்பு உற்சவத்தில் பெரிய பெருமாள் கோலத்தில் ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீராட்ட மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டு, திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு தங்க தோளுக்கினியானில் புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தார்.
- கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்.
- இந்த கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் வடுகப்பட்டி முதல் தெற்குவெங்காநல்லூர் வரையிலான 36 கிலோமீட்டர் தூர பணிகளுக்காக அச்சம் தவிர்த்தான் ஊராட்சியில் கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விளை நிலங்களுக்கு நடுவே கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களுக்கு ஆதரவாக அக்கரைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 193 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் மாணவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ''நாங்கள் இன்று ஒரு நாள் வகுப்புகளை புறக்கணிக்கிறோம்'' என்று கடிதத்தை ஒட்டி விட்டு சென்றனர்.
மாணவர்கள் யாரும் வராததால் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை தாசில்தார் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாது, மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின் 110 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
- ராஜபாளையத்தில் ம.தி.மு.க. கூட்டம் நடந்தது.
- அவை தலைவர் சேது.இன்பமணி தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகர ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.அவை தலைவர் சேது.இன்பமணி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் லிங்கம், அக்பர்அலி, பூபதி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மதியழகன் வரவேற்றார். விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் தமிழ்மணி, துணை பொது செயலாளர் காதர்மைதீன், பொதுக்குழு உறுப்பினர் ஞானகுரு, தலைமைக் கழக சொற்பொழிவாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன் ஆகியோரும் பேசினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், சேத்துர் அய்யனப்பன், இளைஞரணி அமைப்பாளர் அழகர்சாமி, முருகானந்தம், மாணவரணி அமைப்பாளர் ஜெயக்குமார், முகம்மது இத்ரிஸ், தொண்டரணி தர்மலிங்கம், கண்ணன், வேலுசாமி, கருத்தப்பாண்டி, மகளிரணி முனீசுவரி, மீனா, ரதிபிரியா இசக்கியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி அமைப்பாளர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.
- ராஜபாளையம் அருகே 550 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
550 கிலோ புகையிலை பொருட்கள்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில் இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த மூடையை சோதனையிட்டபோது, அதில் 550 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
தொடர் விசாரணையில், அதனை கடத்தி வந்த முகவூரை சேர்ந்த ஜெயபாஸ்கர் மகன் அருண்குமார்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே மனைவி-குழந்தைகளை தவிக்க விட்டு 2 வாலிபர்கள் மாயமாகினர்.
- இதையடுத்து சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் திவான் மைதீன் (வயது32). பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரசிதா யாகீம் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். திவான் மைதீன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு எதிரில் ஜவுளிக்கடை திவான் மைதீனின் பெற்றோரும் இதனை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் திவான் மைதீனை காணவில்லை.
விசாரித்ததில் அந்த ஜவுளிக்கடை பெண்ணும் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ரசிதாயாகீம் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் சேத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், கட்டிட தொழிலாளி. இவருக்கு சித்திரை செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு அவசர வேலையாக வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சித்திரை செல்வி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.=
- சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பூமிபூஜை மார்ச் மாதத்தில் பணிகள் முடியும்.
- இது குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது.
சிவகாசி
நாட்டின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் சிவகாசி பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி விரைவில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
இந்த நிைலயில் சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைப்பதன் அவசியம் குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது. இதன் எதிரொலியாக சிவகாசி அருகே உள்ள ஆனை கூட்டம் கிராமத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் கீழ் இயங்குகி வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் (நீரி)சார்பில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆய்வு மையம் கட்டிடத்திற்கான பூமி பூஜை பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குனர் வேட் பிரகாஷ் மிஸ்ரா, நீரி இயக்குனர் அடுல் வைத்தியா ஆகியோர் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி ைவத்தார் .
இதில் விஞ்ஞானி சாதனா ராயலு, பட்டாசு மற்றும் கேப் வெடி சங்கத் தலைவர் கணேசன், துணைத் தலைவர்கள் ராஜரத்தினம், அபி ரூபன், பொதுச் செய லாளர் பாலாஜி, பாபநாசம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விஞ்ஞானி சாதனா ராயலு நிருபர்களிடம் கூறுகையில், ஆனை கூட்டம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நீரில் பதிவு செய்து சான்று பெற்றுள்ளனர். கட்டுமான பணி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டிட பணி நிறைவு பெறும் என்றார்.
- திருச்சுழி அருகே புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
- மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கேத்தநாயக்கன்பட்டியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டுதொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் நான்கு தொழிற்பிரிவுகளில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ஆணையை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 4-வது அரசினர் தொழிற் பயிற்சி நிலையமாக திருச்சுழியில் 2022-23-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த 1½ ஆண்டு காலத்தில் இந்த பகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும் பெற்று தந்துள்ளார். இன்றைய கால கட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இந்த தொழிற் பயிற்சி நிலையத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.அரசினர் கலைக்கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை இந்த பகுதியில் ஏழை, எளிய மாணவர்கள் கல்வித்தரம் உயர உதவியாக இருக்கும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்்.
இதில் நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வக்குமார், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணக்குமார், திருச்சுழி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாபா போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
- 2-ம் நாள் ஜி.ஜி.கே. முட நீக்கியல் மருத்துவ ஆலோசனை மையம் சார்பில் முட நீக்கியல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் இஸ்மாயில்கான் கோரி வகையறாவுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ள டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது. காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளரும், நலமைய மக்கள் தொடர்பாளருமான சையது இஸ்மாயில் சித்திக் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் முகமது ரபிக், மாலா, சபீனாபானு, ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி எம்.எம்.ஐ.கே. கோரி முன்னிலை வகித்தனர்.
முதல் நாள் டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. சென்னை சிறப்பு மருத்துவர் டாக்டர் எம். பிரோஸ்கான் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் பயனடைந்தனர். 2-ம் நாள் ஜி.ஜி.கே. முட நீக்கியல் மருத்துவ ஆலோசனை மையம் சார்பில் முட நீக்கியல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் பிரோஸ்கான் சிகிச்சை அளித்தார். ஜனதா தள மாநில தலைவரும், எழுத்தாளருமான ஏ.ஏ.ஐ.கே.கோரி, திலாகர்கான், யாகூப்பாட்சாகான்கோரி, ஒய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி அப்துல்ரஷீத்கான்கோரி, காங்கிரஸ் நிர்வாகி ஜாபர் ஆகியோர் பேசினர். டாக்டர் ஜி.ஜி.கே.கோரி மருத்துவ நல மையம் சார்பில் இஸ்மாயில்கான் கோரி அதர்பாத்திமா கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளரும், மக்கள் தொடர்பாளருமான சையது இஸ்மாயில் சித்திக் செய்திருந்தார்.
- விருதுநகர் அருகே தி.மு.க-பா.ஜனதா கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியில் இன்று "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாட பா.ஜனதா கட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நேற்று இரவு ரோசல்பட்டி பஞ்சா யத்து அருகே பந்தல் அமைக்கும் பணிகளில் பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அருகில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். அதற்கு அங்கு நின்றிருந்த தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டுமான பணிகளுக்கான காண்டிராக்டர், பா.ஜனதா கட்சியினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் பா.ஜனதா-தி.மு.க.வினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை காணப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ரோசல்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் சுரேஷ் தலைமையில் தி.மு.கவினரும், ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமையில் பா.ஜனதா கட்சியினரும் தனித்தனியே மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காண்டிராக்டர் தாக்கிய தால் காயம் ஏற்பட்டதாக ராமதாஸ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதுதொடர்பாக காண்டிராக்டர் மற்றும் தி.மு.க.வினர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இன்று காலை பொங்கல் நிகழ்ச்சி பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடந்தது. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில நிர்வாகி பாலகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசியில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகள் மேயர் வழங்கினார்.
- சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
சிவகாசி
சிவகாசி மாநகராட்சியில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஸ்பிரியா தொடங்கி வைத்தனர்.
தி.மு.க., மாநகர செய லாளர் உதயசூரியன், பகுதிகழக செயலாளர் காளிராஜன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சக்திவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் இன்பம், ராஜேஸ், பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் வார்டு கவுன்சிலர்கள் ரேணு நித்திலா, ராஜேஷ், உள்ளிட்டோர் அவரவர் வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில், பயனாளி களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.
சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார். இதேபோல் தேவர்குளம் ஊராட்சியில் தலைவர் முத்துவள்ளி, ஆனையூர் ஊராட்சியில் பொறுப்பு தலைவர் முத்துமாரி, விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், சித்துராஜபுரம் ஊராட்சியில் தலைவர் லீலாவதி, நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜன், அனுப்பன்கு ளம் ஊராட்சியில் தலைவர் கவிதா, செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் கருப்பசாமி, பள்ளபட்டி ஊராட்சியில் பொறுப்பு தலை வர் ராஜபாண்டி, பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.






