என் மலர்
நீங்கள் தேடியது "DMK-PA Janata Party clash"
- விருதுநகர் அருகே தி.மு.க-பா.ஜனதா கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியில் இன்று "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாட பா.ஜனதா கட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நேற்று இரவு ரோசல்பட்டி பஞ்சா யத்து அருகே பந்தல் அமைக்கும் பணிகளில் பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அருகில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். அதற்கு அங்கு நின்றிருந்த தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டுமான பணிகளுக்கான காண்டிராக்டர், பா.ஜனதா கட்சியினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் பா.ஜனதா-தி.மு.க.வினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை காணப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ரோசல்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் சுரேஷ் தலைமையில் தி.மு.கவினரும், ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமையில் பா.ஜனதா கட்சியினரும் தனித்தனியே மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காண்டிராக்டர் தாக்கிய தால் காயம் ஏற்பட்டதாக ராமதாஸ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதுதொடர்பாக காண்டிராக்டர் மற்றும் தி.மு.க.வினர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இன்று காலை பொங்கல் நிகழ்ச்சி பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடந்தது. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில நிர்வாகி பாலகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






