என் மலர்
நீங்கள் தேடியது "Paralysis Centre"
- ராஜபாளையத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
- 2-ம் நாள் ஜி.ஜி.கே. முட நீக்கியல் மருத்துவ ஆலோசனை மையம் சார்பில் முட நீக்கியல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் இஸ்மாயில்கான் கோரி வகையறாவுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ள டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது. காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளரும், நலமைய மக்கள் தொடர்பாளருமான சையது இஸ்மாயில் சித்திக் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் முகமது ரபிக், மாலா, சபீனாபானு, ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி எம்.எம்.ஐ.கே. கோரி முன்னிலை வகித்தனர்.
முதல் நாள் டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. சென்னை சிறப்பு மருத்துவர் டாக்டர் எம். பிரோஸ்கான் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் பயனடைந்தனர். 2-ம் நாள் ஜி.ஜி.கே. முட நீக்கியல் மருத்துவ ஆலோசனை மையம் சார்பில் முட நீக்கியல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் பிரோஸ்கான் சிகிச்சை அளித்தார். ஜனதா தள மாநில தலைவரும், எழுத்தாளருமான ஏ.ஏ.ஐ.கே.கோரி, திலாகர்கான், யாகூப்பாட்சாகான்கோரி, ஒய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி அப்துல்ரஷீத்கான்கோரி, காங்கிரஸ் நிர்வாகி ஜாபர் ஆகியோர் பேசினர். டாக்டர் ஜி.ஜி.கே.கோரி மருத்துவ நல மையம் சார்பில் இஸ்மாயில்கான் கோரி அதர்பாத்திமா கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளரும், மக்கள் தொடர்பாளருமான சையது இஸ்மாயில் சித்திக் செய்திருந்தார்.






