என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பஸ் இருந்த பயணிகளின் உடமைகளும் தீயில் எரிந்து நாசமாகின.
    • ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சாத்தூர்:

    குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கோவைக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை ராமநாதபுரத்தை சேர்ந்த அகிலன் (வயது 44) என்பவர் ஓட்டி சென்றார். களியக்காவிளையை சேர்ந்த விவன் (35) என்பவர் கிளீனராக இருந்தார்.

    ஆம்னி பஸ்சில் மொத்தம் 14 பயணிகள் இருந்துள்ளனர். அந்த பஸ் நள்ளிரவு 12.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வந்தது. சாத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே வந்த போது பஸ்சில் இருந்து பலத்த சத்தம் கேட்டது.

    இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தி கீழே இறங்கி பார்த்தார். அப்போது பஸ்சின் டீசல் டேங்க் அருகே குபுகுபு என புகை வந்தது. இதையடுத்து டிரைவரும், கிளீனரும் சேர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக கீழே இறக்கினர்.

    பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதும் பஸ் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. இதுகுறித்து சாத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் பஸ் முழுவதுமாக தீ பிடித்து எரிந்தது. பஸ் இருந்த பயணிகளின் உடமைகளும் தீயில் எரிந்து நாசமாகின. ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பஸ்சில் தீப்பிடித்து எரிய தொடங்கியபோதே டிரைவர் பார்த்து பயணிகளை உடனடியாக வெளியேற செய்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் மதுரை நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றியமைத்து மற்ற வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

    நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் சாத்தூரில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மஞ்சப்பை-பசுமை சாம்பியன் விருதுக்கு பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தும் தலா 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதேபோல் தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள்/அமைப்புகளுக்கு ''பசுமை சாம்பியன் விருது'' 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம்வீதம் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.இந்த 100 விருதுகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு 3 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் 15.4.2023 வரையிலும், மஞ்சப்பை விருதுக்கான விண்ண ப்பங்கள் 1.5.2023 வரையிலும் சமர்பிக்கலாம்.

    விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள்/தனிநபர்கள்/அமைப்புகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மஞ்சப்பை மற்றும் பசுமை சாம்பியன் விருதிற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளமான (https://virudhunagar.nic.in.) மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய இணைய தளமான (www.tnpcb.gov.in)-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலக வேலைநாட்களில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், விருதுநகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் 2023-24 நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் நகராட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களின் நிலை, சொத்து வரி வசூல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நகராட்சியில் பொது சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினமும் ஒருவார்டை தேர்ந்தெடுத்து தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு செய்திகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சி வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் ஆணையாளர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் செல்வமணி, பொறியாளர் தங்கபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்பட்டு அரசாணை வெளியானது.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சியில் மற்ற நகராட்சிகளை காட்டிலும் சொத்து வரி அதிகளவில் உள்ளது. ஆகவே மற்ற நகராட்சிகளை போலவே ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சொத்து வரியை குறைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அனுப்பட்டது.

    சொத்து வரியை குறைக்க ராஜபாளையம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் ஆகியோரை வலியுறுத்தியதன் பலனாக தற்போது சொத்து வரி குறைக்கப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இந்த நல்ல தகவலை ராஜபாளையம் நகர பொதுமக்களுக்கு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அரசாணை வெளியாக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், தொழில்த்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்து ராஜபாளையம் நகராட்சியில் தீர்மானம் வைத்து கொடுத்த நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம், துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்களுக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் அரசு அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் கொள்ளையடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ.கால னியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது71). இவர் அரசு புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் சம்பவத்தன்று ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். பணத்தை எடுப்ப தற்கு முன் வரவு-செலவு கணக்கு விபரங்களை சரி பார்க்க நினைத்தார்.

    அப்போது அருகில் இருந்த 35வயது மதிக்கத்தக்க 2 பேர் சீனிவாசனிடம் நைசாக பேசி தாங்கள் விபரங்களை எடுத்து தருகிறோம் என கூறி ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி யுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் சீனிவாசனின் ஏ.டி.எம். கார்டை வைத்துக் கொண்டு மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

    இதை அறியாத சீனிவாசன் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தியபோது ரகசிய குறியீடு எண் தவறு என காட்டப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது தன்னுடையது இல்லை என சீனிவாசன் உணர்ந்தார். இதற்கிடையே ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் சீனிவாசன் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
    • பி.டெக், என்ஜினீயரிங், அக்ரிகல்சா், ஆர்க்கிடெக்சா், பி.எஸ்சி, பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., கேட்டரிங், பாரன்சிக் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்விபுத்தூர்

    ஸ்ரீவில்விபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் ெதாடக்க விழா பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நிறுவனா் கலசலிங்கம் மணிமண்டபத்தில் நடந்தது. பி.டெக், என்ஜினீயரிங், அக்ரிகல்சா், ஆர்க்கிடெக்சா், பி.எஸ்சி, பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., கேட்டரிங், பாரன்சிக் போன்ற படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவா்களுக்கு பல்கலை துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் வழங்கினார்.

    இணைவேந்தர் டாக்டா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவா் எஸ்.சசிஆனந்த், சுபா ஆனந்த், துணைத் தலைவா் எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், ஷில்பா அா்ஜூன், ஆலோசகா் ஞானசேகா், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளா் வாசுதேவன், மாணவா் சோ்க்கை இயக்குநா் லிங்குசாமி, நிதி நிர்வாக அதிகாரி தா்மராஜ் மற்றும் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

    • ராஜபாளையம் ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 60-வது ஆண்டு விழா நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60-வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை தாங்கினார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை முதல்வர் சீனிவாசன் சமர்பித்தார். மாணவர் தலைவர் நிர்தேவ் குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை கோட்ட ரெயில்வே மூத்த முதுநிலை பொறியாளருமான வில்லியம் ஜாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் ரவி காரில் புறப்பட்டுச் சென்றார்.
    • கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து போலீசார் 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு வந்தார். அவர் இன்று காலை தனது மனைவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் ரவி காரில் புறப்பட்டுச் சென்றார்.

    ராஜபாளையத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திசிலை ரவுண்டானா பகுதியில் இன்று காலை மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடியுடன் திரண்டனர்.

    அவர்கள் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் உடனே களைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து போலீசார் 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாக இருந்தது.

    • புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    • இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக்கூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் ராஜபாளையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் செயல்பட்டு வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த ஆட்சியாளர்களால் ராஜபா ளையம் தொகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- கிருஷ்ணன்கோவில் அருகில் கொண்டு செல்லப்பட்டது,

    இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற மிகவும் அவதிப்படுவதாக என்னிடம் பொது மக்களும், வாகன ஓட்டுநர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், உடனடியாக நான் ராஜபாளையம் தொகுதிக்கு புதிதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்க வேண்டி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்து தொடர்ந்து வலியுறுத்தியதின் பலனாக போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியா கியுள்ளது.

    இந்த அறிவிப்பு வெளி யாக நடவடிக்கை எடுத்த முதல்- அமைச்ச ருக்கும், போக்கு வரத்துத்துறை அமைச்ச ருக்கும், வருவாய்த்துறை அமைச்ச ருக்கும், தொழில் துறை அமைச்சருக்கும், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டிக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ராஜபா ளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்ப டுத்தி வருகிறார்.

    அதில் சிறப்பு வாய்ந்த திட்டமான சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்த ராஜபா ளையம் வட்டத்தை மீண்டும் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் திட்டம், செயல்படுத்தப்பட்டு தற்போது டெண்டர் விட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் சக்தி கண் மருத்துவமனை வரை இணைப்பு சாலை அமைக்கும் திட்டம்,செயல்படுத்தப்பட்டு இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கும் திட்டம் என மேற்கண்ட 4 சிறப்பு வாய்ந்த திட்டங்களை ராஜபாளையம் தொகுதிக்கு வழங்கிய முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும், பொதுமக்களும் உறுது ணையாக இருப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் உழவர்சந்தை கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் E-NAM செயல்பாடுகள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிட்டங்கியை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 4.2 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட விளை பொருட்களை சுத்தமாகவும், தரமாகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். உழவர் சந்தைக்கு வருகை புரிந்த விவசாயிகளிடம் அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்கள், விலை விபரங்கள், வருகை நாட்கள் மற்றும் நுகர்வோர்களிடம் உழவர் சந்தை பயன்கள் குறித்து கலந்துரையாடினார்.

    உழவர் சந்தை அலுவலர்களிடம் காய்கறி விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்து உழவர் சந்தைக்கு கூடுதலான விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்க அறிவுறுத்தினார்.

    பின்பு விருதுநகர் விற்பனை குழுவின் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்படுத்தப்படும் E-NAM திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடனுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் E-NAM திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளான மின்னணு ஏலஅறை, தரப்பகுப்பாய்வு ஆய்வகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிட்டங்கியில் பொருளீட்டுக் கடனுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருள்கள் ஆகியவற்றையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்ட ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியாரம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லபுத்தூர் அருகேயுள்ள கொங்கலா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியை மேரி தலைமை யில் நடைபெற்றது.

    டி.மானகசேரி ஊராட்சி மன்றத்தலைவி சுபிதா மாயக்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் கார்த்தி கேயன் வரவேற்றார். ஆசிரியை ஆனந்தவல்லி ஆண்டறிக்கை வாசித்தார்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும் மாநில தலைமை கராத்தே பயிற்சி யாளர் சென்சாய் செபஸ்தி யான் தலைமையி்ல் மாணவிகள் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்திக்காட்டினர்.

    கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.

    விழாவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், தன்னார்வலர்கள் வளர்மதி, வேல்துரைச்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்ட னர். ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    • கவர்னர் வருகையை முன்னிட்டு போலீசார்-அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் 60-வது ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராஜபாளையத்திற்கு நாளை (1-ந் தேதி) வருகிறார்.

    அவர் காலை 7 மணியளவில் ஸ்ரீங்கேரி சாரதாம்பாள் கோயில் மற்றும் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    இதையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகராட்சி ஆணையர் பார்த்த சாரதி, ஆளுநரின் பாது காப்பு ஆய்வாளர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×