என் மலர்
உள்ளூர் செய்திகள்

குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற நடவடிக்கை-கலெக்டர் அறிவுறுத்தல்
- ஸ்ரீவில்லிபுத்தூரை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் 2023-24 நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் நகராட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களின் நிலை, சொத்து வரி வசூல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நகராட்சியில் பொது சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினமும் ஒருவார்டை தேர்ந்தெடுத்து தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு செய்திகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சி வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் ஆணையாளர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் செல்வமணி, பொறியாளர் தங்கபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






