search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடி காட்ட முயற்சி- 70 பேர் கைது
    X

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடி காட்ட முயற்சி- 70 பேர் கைது

    • ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் ரவி காரில் புறப்பட்டுச் சென்றார்.
    • கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து போலீசார் 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு வந்தார். அவர் இன்று காலை தனது மனைவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் ரவி காரில் புறப்பட்டுச் சென்றார்.

    ராஜபாளையத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திசிலை ரவுண்டானா பகுதியில் இன்று காலை மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடியுடன் திரண்டனர்.

    அவர்கள் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் உடனே களைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து போலீசார் 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாக இருந்தது.

    Next Story
    ×