என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமசாமிராஜா பாலிடெக்னிக் ஆண்டு விழா
- ராஜபாளையம் ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 60-வது ஆண்டு விழா நடந்தது.
- இதில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ராஜபாளையம்
ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60-வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை தாங்கினார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை முதல்வர் சீனிவாசன் சமர்பித்தார். மாணவர் தலைவர் நிர்தேவ் குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை கோட்ட ரெயில்வே மூத்த முதுநிலை பொறியாளருமான வில்லியம் ஜாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
Next Story






