search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Property tax reduction"

    • ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்பட்டு அரசாணை வெளியானது.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சியில் மற்ற நகராட்சிகளை காட்டிலும் சொத்து வரி அதிகளவில் உள்ளது. ஆகவே மற்ற நகராட்சிகளை போலவே ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சொத்து வரியை குறைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அனுப்பட்டது.

    சொத்து வரியை குறைக்க ராஜபாளையம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் ஆகியோரை வலியுறுத்தியதன் பலனாக தற்போது சொத்து வரி குறைக்கப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இந்த நல்ல தகவலை ராஜபாளையம் நகர பொதுமக்களுக்கு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அரசாணை வெளியாக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், தொழில்த்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்து ராஜபாளையம் நகராட்சியில் தீர்மானம் வைத்து கொடுத்த நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம், துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்களுக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×