என் மலர்
விழுப்புரம்
- நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.
- செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்:
செஞ்சிக்கோட்டையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார். நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடிகை சோனாலி குல்கர்னி கதாநாயகியாகவும் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நாளை 29-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையில் பொம்மைகளை கொண்டு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
- சாராயம் விற்பனை செய்தவர்கள் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால்கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் என பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளியனூர் போலீஸ் நிலையத்திலும் ஜெயலலிதா எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.கடந்த வாரம் அதே பகுதியில் சாராயம் குடித்து கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலீசார் சாராயம் விற்பனை செய்தவர்கள்மற்றும் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இதையடுத்து ஜெயலலி தாவை இன்று காலை திடீரென போலீசார் கைது செய்ய வந்தனர். ஊராட்சி மன்ற தலைவரும் பொதுமக்களும் ஜெயலலிதா சாராயம் விற்பனை செய்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீஸ் நிலையத்திலும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாராயம் விற்க மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை கைது செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட .பொது மக்கள் போலீசாரை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால்,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவை விட்டால் தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் போலீசார் ஜெயலலிதாவை அங்கே விட்டு விட்டு சென்றனர்.
- துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
- பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் அரைகுறையாக படித்ததை வைத்து, நடப்பு நிகழ்வுகள் தெரியாமல் பேட்டி அளித்து வருகிறார். அண்ணாமலை விரும்பினால் அவர் சென்னையில் எந்த இடத்தில், எப்போது சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அங்கு நான் அவரோடு கலந்து கொண்டு விவாதிக்க தயாராக உள்ளேன். வருகிற 5-ந் தேதி துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் மும்மொழி கல்வி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இணை வேந்தரான எனக்கோ, தமிழக அரசுக்கோ இதுவரை இது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அண்ணாமலை பேசும்போது இது எல்லாம் அரசுக்கு தெரியும் என்று தவறான தகவலை தெரிவித்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் அண்ணாமலை தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.இந்த கூட்டத்திற்கு பின்பு தான் அந்த பொறுப்பில் சிண்டிகேட் உறுப்பினராக அவரை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கமாக உள்ளது. எப்போதும் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் பல மொழிகளை படிக்கும் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல சங்கடங்கள் ஏற்படுகிறது. அவற்றை தவிர்ப்பதற்காகத்தான் இரு மொழி கொள்கையை நாங்கள் கட்டாயப்படுத்தி வருகிறோம். சமஸ்கிருதம், இந்தி படித்தால் அதிக ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு எந்த மாநில மொழிகளுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்படவில்லை. தமிழுக்கு எந்த சலுகையும் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெறவில்லை. ஆனால் அண்ணாமலை தமிழுக்கு நாங்கள் என்ன செய்து விட்டோம் என்று எங்களை பார்த்து கேட்கிறார்.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. கோவிலில் சமஸ்கிருதம் வேண்டாம் தமிழ் போதும் என்று அண்ணாமலை சொல்வாரா? இவர்கள் நோக்கம் எல்லாம் இந்தியாவில் சமஸ்கிருதமும், இந்தியும் திணிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்ெமாழிக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு பொது தேர்வு வைப்பதால், அதிக அளவு மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் ஏற்படும். இதனை தவிர்க்கவே நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கல்வி வளர்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் சாதனைகள் அதிகம். கடந்த 2 ஆண்டுகளில் பல சாதனைகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அண்ணாமலை அவற்றையெல்லாம் மறந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அண்ணாமலை விரும்பினால் நான் அவருடன் சென்னையில் ஒரே இடத்தில் பட்டிமன்றம் நடத்தவும் தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
- அனைத்து பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது
- 1,00,000 நபர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார்.
விழுப்புரம்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, சமூக பாதுகாப்புத் திட்டத்தி ன்கீழ், தமிழ்நாட்டில் புதியதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வாயிலாக, தமிழ்நாடு அரசு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகா க்கும் வகையில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதி யத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பல்வேறு மாவட்டங்களில், முதியோர் உதவித்தொகைக்கான அனுமதி பெற்று காத்திரு ப்போர் பட்டியலில் 64,098 நபர்கள் மற்றும் புதியதாக 35,902 நபர்கள் என மொத்தம் 1,00,000 நபர்களுக்கு வரும் ஜுன் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,000 (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500) உதவித்தொகை பெறும் வகையில். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி 1,00,000 நபர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் சிறுபா ன்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த 7 -ந்தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து ெகாண்டார். பின்னர், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில், 9 வட்ட த்திற்குபட்ட 950 பயனா ளிகளுக்கு உதவி த்தொகை பெறுவ தற்கான ஆணை ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் வழங்க ப்பட்டுள்ளது. என அவர் கூறியுள்ளார்.
- விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
- அமைச்சர் பொன்முடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டிஎம்.எல்.ஏ. புகழேந்தி, மாவட்ட விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சீலா தேவி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், திருவெண்ணைநல்லூர் யூனியன் சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஒன்றியகுழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏமப்பூர் தேவி செந்தில், டி.எடையார் சுந்தரமூர்த்தி வரவேற்றனர். இதில் தமிழக உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்எம்.எல்.ஏ. புஷ்பராஜ் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட பிரதிநிதி பக்தவச்சலு மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு ,நந்தகோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுபாஷ், மஞ்சுளா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பா ளர் விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமை ப்பாளர் வெங்க டேசன், தலைமைக் கழக பேச்சாளர் சிறுவனூர் பரசுராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
- புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.
இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில் சென்னையை சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை அதிபரான இளைய நம்பி, தொழிற்சாலை மூடப்பட்டதால் அவரிடம் தேங்கி இருந்த மெத்தனால் என்ற விஷத் தன்மை வாய்ந்த வேதிப் பொருளை புதுச்சேரியை சேர்ந்த சாராய வியாபாரியான ஏழுமலையிடம் விற்பனைக்கு அனுப்பி உள்ளார்.
6 பேரல் மெத்தனாலை வாங்கிய ஏழுமலை புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா மூலம் மரக்காணம் சாராய வியாபாரிகளான அமரன், முத்து உள்ளிட்டோருக்கு குறைந்த விலைக்கு 200 லிட்டர் விற்றுள்ளார். வழக்கமாக புதுச்சேரி சாராயத்தை வாங்கி பாக்கெட் செய்து விற்று வரும் மரக்காணம் சாராய வியாபாரிகள் போட்டி காரணமாக அதிக போதை தரும் என்பதால், சாராயத்துடன் மெத்தனால் சேர்த்து, கடந்த 13-ந் தேதி மாலை விற்பனை செய்துள்ளனர். இதனால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12-வது நபரான மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சாராயம் விற்பனை தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்
- தனிப்படை போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர்உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்பு டையதாக கூறப்படும் திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யாவின் கணவர்பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜா கைது செய்யப்பட்டு குண்டத் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடை க்கப்பட்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் கணவர் பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜாவின் கூட்டாளிகளான கீழ்புத்தேரி பகுதியைச் சேர்ந்த இளய செல்வம் , ஜெயசீலன் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசார அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகையூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
- கலெக்டர் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக விழுப்பு ரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்தார். அருளவாடி கிராமத்தில் 28 லட்சத்து 18 ஆயிரம் செலவில் பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, மற்றும் ரூபாய் 5 லட்சத்து 51 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கும் பணி, ரூ. ஒரு லட்சத்து 55 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் நூலகம் பழுது நீக்கம் பணி ரூ. 3 லட்சத்து 52 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் மினி பவர் பம்ப் கட்டும் பணி ஆகியவ ற்றையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஆற்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டிட த்தையும், வீரசோழபுரம் கிராமத்தில் ஊராட்சி ரூ. 42 லட்சத்து 65 ஆயிரம் செலவில் நடை பெற்று வரும் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணியை யும் பார்வையிட்டதுடன் பணியை தரமாக வும் விரைவாகவும் செய்து முடிக்க உத்தரவிட்டார்.
முகையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு திடீரென சென்ற மாவட்ட கலெக்டர் பழனி அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளி களிடம் குறைகள் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர்களிடமும் ஏதேனும் குறைகள் உள்ளதா என கலெக்டர் பழனி கேட்டார். அப்போது மருத்துவம னைக்கு சிகிச்சை க்கு வரும் நோயாளி களுக்கு கூடுதலாக ஒரு கழிவறை வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் பழனி அருகில் இருந்த முகையூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்களிடம் நோயாளிகளில் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவி ட்டார். ஆய்வின்போது முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் ,நாராயணன், கண்டாச்சி புரம் தாசில்தார் கற்பகம், உதவி பொறியாளர்கள் நாகராஜ் மற்றும் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது.
- ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள்.
இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் சாராய வியாபாரிகள் 11 பேரிடமும் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.
மெத்தனால் எங்கிருந்து வந்தது. எந்தெந்த சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியான சென்னை திருவேற்காட்டை சேர்ந்த இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கிய ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து தான் 1,250 லிட்டர் மெத்தனாலை புதுச்சேரியை சேர்ந்த இளைய நம்பி நண்பர் ஏழுமலைக்கு ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இன்று மாலையுடன் 11 பேரின் காவலும் முடிவடைகிறது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
- தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி.
- இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.
விழுப்புரம்:
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடப்பிரிவுகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் விழுப்புரம் அண்ணா உறுப்பு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்ள சென்ற பொழுது கல்லூரி முதல்வரும் நிருபர்களும் என்னிடம் கூறினார்கள். ஆனால் இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. உடனடியாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக நேற்று காலை அறிவித்திருந்தார்.
தமிழ் வழியில் படிக்க மாணவர்கள் இல்லை என்று அதை மூடுவது முக்கியமல்ல. தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் பாடப் பிரிவுகள் கொண்டு வரவும் சட்டம் இயற்றப்பட்டது.
நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.
ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல் காரணங்களுக்காக பேச வேண்டும் என்று அவர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அவருக்கு தமிழைப் பற்றியும் தெரியாது. தமிழரது வரலாறும் தெரியாது. கன்னடத்தில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது. அவர் நான் மழுப்பலாக பதில் அறிவித்திருந்தேன் என்று கூறிவருகிறார். நான் என்ன மழுப்பலாக அறிவித்து விட்டேன். அவர்கள் போல் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தை மக்களிடம் திணிப்பதற்கு முயல்கிறேனா. அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசி வருகிறார்.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கலைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்று சட்டமாக இயற்றி அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது போன்ற பிரச்சனைகள் களையப்படும்
மேலும் பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் ஒரு சில இடங்களில் நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. படிப்படியாக கட்டமைப்பு உயர்த்தப்பட்டு மாணவரின் கல்வித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
- திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
- தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்தாண்டு கோவில் திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதுடன் சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை தாக்குதல் தொடுத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்டுவதோடு திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
- இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்ட அடுத்த வி.சாத்தனுரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). இவர் விக்கிவாண்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலையில் திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






