என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
    • பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயிகளையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கந்தாடு, புதுப்பாக்கம் ,நடுக்குப்பம் ,அசப்போர், ஊரணி, ராய நல்லூர், வட அகரம், காக்காபாளையம் , திருக்கனூர், வண்டி பாளையம், காணி மேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காடுகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது . மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் தைல மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து அடர்த்தியான காடுகளாக உள்ளது .இதுபோல் இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏரிகள், ஓடைகள் குட்டைகள் உள்ளது.

    இப்பகுதிகளில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள் இருக்கின்றது. இங்குள்ள காடுகள் மற்றும் கருவேல மரங்கள் இருக்கும் இடத்தில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றது. இந்த காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெல் ,மணிலா, தர்பூசணி மரவள்ளி போன்ற பயிர்களை அழித்து நாசப்படுத்துகின்றது. இதுபோல் விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயி களையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்காக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தற்போது காடுகளை ஒட்டி உள்ள விவசாய பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகளை தடுக்க அரசு சார்பில் ஒருவித ரசாயன மருந்தை மானிய விலையில் கொடுக்கின்றனர்.

    இந்த ரசாயன மருந்தை வயல்வெளியில் தெளித்து விட்டால் வனவிலங்குகள் விவசாய பயிர்களை அழிக்காது. இது போன்ற ரசாயன மருந்துகளை பல இடங்களில் வேளாண் துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். எனவே மரக்காணம் மட்டும் சுற்றுப்புற ப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க இது போன்ற ரசாயன மருந்துகளை உடனடியாக வழங்கி விவசாயி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி.
    • சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மலர்விழியின் பெற்றோர் விழுப்புரம் 36-வது வார்டு சாலமேடு புகாரி நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களது வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னரே ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்பது தெரியவரும்.

    பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி சென்னையை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் பலியானர்கள்.
    • நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம்:

    சென்னை எம்ஜிஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரனும் (17) நண்பர்களாவர். கிருபாகரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்நிலையில் இவர்களும், இவர்களது நண்பர்கள் 4 பேரும் 3 மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த அதிக வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஹரியும் கிருபாகரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரி ஓட்டிச்சென்றார்.

    திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வந்த போது ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் ஹரி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்தார். இவரது பின்னால் அமர்ந்து வந்த பிளஸ்-2 மாணவன் கிருபாகரன் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்சில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் கிருபாகரன் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். விவசாயம் செய்து வருகிறார்.

    இவருடைய 2-வது மகன் பூபாலன் (வயது 31). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சேத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென திருமணம் நின்று போனது.

    இதனால் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 11 மணி அளவில் பூபாலன் அதிக அளவில் வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் இதற்கான காரணத்தை கேட்டுள்ளனர்.

    உடனே பூபாலன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூபாலன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்தனர்.

    விழுப்புரம்:

    தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று நினைவிடங் களை ஆய்வு மேற்கொண்டனர்.

    செஞ்சி அருகே உள்ள ஜெயினர்களின் நிறை விடமான திருநாதங்குன்று, நெகனூர், பட்டி, ஆகிய இடங்களில் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் செஞ்சிக்கோட்டை செஞ்சி அருகே உள்ள வெடால், தொண்டூர், சீயமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்த னர். இடங்களை பேரா சிரியர்கள் வசந்தி, ஜீவா, தமிழரசு ஆகியோர் மாண வர்களுக்கு விளக்கி கூறி னார்கள். அப்போது அகிம்சை நடை ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதரன், சேட்டு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
    • மக்கள் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம்

    விழுப்புரம்:

    திண்டிவனம் வட்டத்தில் 1432-ம் பசலிக்கான வரு வாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் விழுப்புரம், உதவி ஆணையர் (கலால்) தலை மையில், குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை (சனி, ஞாயிறு விடு முறை நாட்கள் நீங்களாக) திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தினசரி காலை 10மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. திண்டிவனம் வட்டத்திற் குட்பட்ட கிராம பொது மக்கள் இந்த நாட்களில் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம் என திண்டிவனம் தாசில்தார் அலெக் சாண்டர் தெரிவித்துள்ளார்.

    • மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார்.
    • 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ஓட்டேரி பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி சத்யா( வயது 29.) இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ந் தேதி தனது ஸ்கூட்டியில் ஓட்டேரிபாளையத்தில் இருந்து செஞ்சி நோக்கி தனது தோழியின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார். குண்டலப்புலியூர் அருகே வரும்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்2 பேர் சத்யா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து சத்யா கொடுத்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை எடுத்து செஞ்சி டி.எஸ்.பி. கவினா தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. அந்த அடையாளத்தை வைத்து நகை பறித்த வாலிபர்களான திருவண்ணாமலையை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் முபாரக் (வயது 30) மற்றும் சாகித் அலி மகன் பாரூக் அப்துல்லா (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • திருமண மண்டபம் அருகே மளிகை கடையில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் சாலை அனிச்சம் பாளையம் பாலிமர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால சிங்கம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட தில் விழுப்புரம் மருதூர் எம்.ஆர்.கே தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 30), தனியார் மண்ட பம் எதிரே உள்ள மளிகை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 382 பாக்கெட் போதை மற்றும் குட்கா பொரு ட்களை கைப்பற்றிய விழு ப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர்.

    • வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள்.
    • ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தீர்த்தவாரி பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்தும் உள்ளூரிலிருந்தும் காலை மாலை என 100 -க்கும் மேற்பட்டோர் இந்த கடலில் குளித்து ஆனந்த குளியல் போடுவது வழக்கம். இதனால் கடந்த சில வாரங்களாக அக்னி வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் வெயிலில் இருந்து தப்பிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள். இதனால அலைக்கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் உயிர் பலி ஏற்படுகிறது. எனவே மரக்காணம் போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து எச்சரித்து வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அல்லது ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • 40 ஆண்டுக்குப் பிறகு கோவில் திருவிழா இந்தாண்டு கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரும்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த திரவுபதி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மகாபாரத கதையை மையமாக வைத்து 18 நாட்கள் திருவிழா நடை பெறும். 40. ஆண்டுக்குப் பிறகு கோவில் திருவிழா இந்தாண்டு கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்புபூஜைகள், தெருகூத்து, இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, இன்னிசையுடன், இரவில் சாமி திருவீதி உலா மற்றும் பக்காசூரன் திருவிழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 5 மணிக்கு அரவாண்வீதியுலா, மதியம் 12 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவர்கள்வர்கள் கதையை மையமாக கொண்ட மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3 மணியளவில் அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் நடந்ததது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு திமீதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப் பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன் பிறகு அம்மனுக்கு நடந்த மகாதீபாராதனையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் நாளை தர்மர் பட்டாபிஷேகம் நடை பெறுகிறது. 40 ஆண்டுக்கு பிறகு இந்த திருவிழா நடை பெறுவது குறிப்பிடத்தக்கது.

    • ஆலம்பூண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காசிேவல் சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    செஞ்சிஅருகே உள்ள பரதன் தாங்கல் என்ற ஊரை சேர்ந்தவர் காசிவேல் (வயது 51). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆலம்பூண்டிக்கு சென்று விட்டு மீண்டும் பரதன்தாங்கல் வந்து கொண்டி ருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து ஆலம்பூண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காசிேவல் சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த காசிவேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசிவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செஞ்சி ரோட்டரி சங்கம் மற்றும் 9-வதுவார்டு கவுன்சிலர் ஆகியோர் பங்களிப்புடன் ரூ15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜய குமார் வல்லம் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் , பேரூராட்சி உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் கார்த்திக், பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×