என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • ஜெயஸ்ரீ பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார்.
    • டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. மழவராயனூர் கிராமத்தைச் ேசர்ந்தவர் யேசுடையான் மகள் ஜெயஸ்ரீ (வயது 16). திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார். 

    இந்நிலையில் வீட்டில் ஜெயஸ்ரீயின் அண்ணன் சமையல் செய்யவில்லை என ஜெயஸ்ரீயை திட்டினார். இதனால் மனம் உளைச்சலில் இருந்த இவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கீேழ விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவாக்ள் ஜெயஸ்ரீயை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியது.
    • விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்நேற்று இரவு பலத்த காற்று வீசியது. திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியில் பல ஆண்டுகளாகஅரசுக்கு சொந்தமான பட்டுப்போன புளிய மரம் உள்ளது.இந்த புளிய மரத்தை அகற்றக்கோரி பல மாதங்களாக அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவலகம் மற்றும் 29-வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    ேநற்று திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியபோது கிடங்கல் - 1 ல் இருந்த பட்டுப்போன புளியமரம் திடீரென சாய்ந்து விழுந்தது. அந்த மரம் அருகில் உள்ளமின் கம்பத்தின் மீதும் அருகே இருந்த பாலகுரு என்பவருக்கு சொந்தமானமினி லாரி, இருசக்கர வாகனம் ஆகியவை மேல் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தது.மேலும் மின்கம்பம் மீது சாய்ந்ததால் அருகே இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

    இந்த விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் 29 -வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனி டம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த வருவாய் துறை மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே மணக்கோலத்தில் கல்லூரிக்கு வந்து யுவஸ்ரீ செமஸ்டர் தேர்வு எழுதினார்.
    • தேர்வு எழுத வந்த மாணவி யுவஸ்ரீயை, அவரது கணவர் மணக்கோலத்தில் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ (வயது 23). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.

    இந்நிலையில் யுவஸ்ரீ-க்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. அதே சமயத்தில் கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு இன்று நடக்க இருந்தது. இதனை எழுத முடிவு செய்த யுவஸ்ரீ, இது தொடர்பாக தனது கணவரிடம் இதனை தெரிவித்தார். இதனை அவரது கணவர் ஏற்றுக்கொண்டார். திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே மணக்கோலத்தில் கல்லூரிக்கு வந்து யுவஸ்ரீ செமஸ்டர் தேர்வு எழுதினார்.

    அவரை, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் வெகுவாகப் பாராட்டினர். தேர்வு எழுத வந்த மாணவி யுவஸ்ரீயை, அவரது கணவர் மணக்கோலத்தில் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது.
    • விசுவநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாசில்தார் அலு வலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டரும், மாவட்ட ஜமா பந்தி அலுவலருமான விசுவ நாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் நெகருன்னிசா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக அக லூர், முக்குணம், தாமனூர், சின்னகரம், அருகாவூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஜமாபந்தி மேலாளர் கண்ணன் தனி தாசில்தார்கள் கோவிந்த ராஜ், மனோகரன் துணை தாசில்தார்கள் குணசேகரன், உமாமகேஸ்வரி, ரவி வட்ட வழங்கல் அலுவலர் வெங்க டேசன் வட்ட துணை ஆய்வாளர் முனியன் வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், பழனி, கார்த்திகேயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று 22 கிராமங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 22 கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து இன்று கள்ளப்புலியூர், மேலத்திப் பாக்கம், எடமலை, பென்னகர் உட்பட 20 கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட உள்ளன. ஜமா பந்தி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது.

    விழுப்புரம்:

    மயிலம் கீழ்எடையாலம் பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மனைவி செல்வமணி (வயது 50) பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பெரியதம்பி தனது மோட்டார் சைக்கிளில் மனைவி செல்வமணியுடன் கீழ்எடையாலம் பகுதியில் இருந்து கூட்டேரிபட்டிற்கு கடைக்கு தேவையான பல சரக்கு வாங்குவதற்கு சென்றனர். 

    இதனை யடுத்து பலசரக்கு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கூட்டேரிபட்டி லிருந்து கீழ்எடையாலத்திற்கு வந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் வந்த போது பின்னால் வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கி ளிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெரியதம்பி, இவரது மனைவி செல்வமணியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 108 ஆம்புலன்சில் செல்லும் வழியிலே செல்வமணி பரிதாப மாக உயிர் இழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பெரிய தம்பிக்கு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த செல்வமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை கலெக்டர் பழனி பாராட்டினார்.
    • புத்தகப் பையினை பரிசாக வழங்கினார்.

    விழுப்புரம்:

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக இல்லங்களில் தங்கி 10-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்து அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை மாவட்ட கலெக்டர் பழனி பாராட்டி புத்தகப் பையினை பரிசாக வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கே.ஜி பார்கவி,பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது.

    வைகாசி மாத பிரம்மோற் சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.கனகவல்லி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் பெருமாள் தேரில் எழுந்தருளினார். முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். திண்டிவனம் நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழக்கங்க ளுடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திண்டிவனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பாக பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் தீன தயாளன், மாவட்ட பொருளாளர் கே.வி.என். வெங்கடேசன், பி.ஆர்.எஸ். உரிமையாளர் ரங்க மன்னர், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமை யாளர் வெங்கடேசன் நிர்வாக அதிகாரி சூரிய நாராயணன், செயல் அலுவலகர் சிவசங்கர், ஒலக்கூர் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், கவுன்சிலர் லட்சுமி பிரபா மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    மேல்பாதியில் 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நடை பெற்ற திருவிழாவில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இரு சமுதாய மக்களிடையே பிரச்சினை உருவானது.

    கோவிலில் வழிபாடு மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 முறையும் பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு காணப்படவில்லை.

    இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

    அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் கோவில் அமைந்துள்ள பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோவில் அருகில் இரு தரப்பினரும் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இன்று 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் இரு தரப்பினரும் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்து பூர்வமாக உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் 2-ம் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 780 நகர்புற நல்வாழ்வு மருத்துவமனைகளை தொடக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • குத்துவிளக்கு ஏற்றி வைத்துபொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் நெருக்கடி உள்ள பகுதிகளிலும் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் குடிசை வாழ் பகுதிகளிலும் நகர்ப்புற மருத்துவ மனைகளை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 780 நகர்புற நல்வாழ்வு மருத்துவமனைகளை தொடக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழகத்தில் 500 இடங்களில் நகர்புற நல வாழ்வு மையத்திதை றந்து வைத்தார். விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலை அண்ணா அறிவாலயம் பின்புறத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனைமையும், விழுப்புரம் பானாம்பட்டு அரசு பள்ளி அருகிலும் நகர்புற நல்வாழ்வு மையங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து வழுத ரெட்டி பகுதியில் டி.ஆர்..ஒ பரமேஸ்வரி, , எம். எல் .ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் மாவட்ட சேர்மன் ஜெய ச்சந்திரன் தலைமையில் , விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, துணை சேர்மன் சித்திக் அலி, கவுன்சிலர்கள் வித்திய சங்கரி பெரியார், மணவாளன், புருஷோத்தமன், சங்கர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் பொற்கொடி, தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் செயலாளர் சக்கரை, மாவட்ட துணை செய லாளர் தயாஇளந்திரையன், முன்னாள் கவுன்சிலர் முத்து கணேசன், பொறியாளர் பிரிவு பரத், தி.மு.க. வார்டு செயலாளர்கள் சிட்டிபாபு, விஜய் சேதுபதி, டாக்டர் தாமரை மணவாளன், பெரியார் நகர் தீவனுரான், முன்னாள் முகாம் அமைப்பாளர் ஓவியர் காசிலிங்கம் கலந்து கொண்டனர் முடிவில் நல்வாழ்வு மைய மருத்துவமனை டாக்டர் நன்றி கூறினார்.

    • மரகிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, ஆலப்பாக்கம், முறுக்கேறி, பிரம்மதேசம், எண்டியூர், கந்தாடு ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பம், மாமரங்கள், பலாமரங்கள், தைல மரங்கள் போன்றவைகள் மின் வயரில் விழுந்து சேதமானது. இதனால் மின்சாரம் அடியோடு நிறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 30 கிராம மக்கள் மின்சாரம் இன்றி இரவு முழுவதும் அவதிக்குள்ளாகினர். ஊரணி கிராம சாலை முழுவதும் மா மரங்கள் விழுந்து மின்கம்பம் உடைந்து போக்குவரத்து அடியோடு துண்டி க்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழி குப்பம் கிராமத்தில் மர கிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மரக்காணம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர கிளை களை அப்புறப்ப டுத்தினார்கள். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மரக்காணம் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • குழந்தைகள் விளையாடும் பூங்காவில் உள்ள ஊஞ்சலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஊஞ்சல் விளையாடினார்.
    • தி.மு.க கவுன்சி லர் சந்திரன், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 43 லட்சம் மதிப்பில் திண்டிவனம் வகாப் நகரில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடை பெற்றது. இந்த பூங்காவை சிறுபான்மை துறை அமை சசர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். இதனையடுத்து குழந்தைகள் விளையாடும் பூங்கா வில் உள்ள ஊஞ்சலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஊஞ்சல் விளையாடினார்.

    இதில் நகர மன்ற தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் தி.மு.க நிர்வாகிகள், நகரா ட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. சீதா பதி சொக்கலிங்கம், ஒல க்கூர் சேர்மன் சொக்க லிங்கம், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், தி.மு.க மாவட்ட பொருளா ளர் வழக்கறிஞர் ரமணன், அரசு ஒப்பந்ததாரர் நந்தா, கவுன்சிலர் ஜனார்த்தனன், தி.மு.க நகர துணை செயலா ளர் ஓவியர் கௌதமன், தி.மு.க கவுன்சி லர் சந்திரன், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
    • 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்-சென்னை சாலையில் மேல்பாதி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற்றது.

    அப்போது பட்டியலினத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வழிபட வந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்கள் அடையாள அட்டையை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தாசில்தார், கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. மேலும் கலெக்டர் பழனி தலைமையிலும் இரு சமூத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 8 முறை இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் சுமூக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு திடீரென சீல் வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் எடுத்துள்ளனர்.

    கோவிலுக்கு சீல் வைக்கப் பட்டதால் மேல்பாதி கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேல்பாதி கிராம முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவிலை சுற்றிலும் பேரி கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட்டு ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர்.

    விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பிவிடப்பட்டது. அதே போல் கோலியனூர் கூட்டு ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பிவிடப்பட்டது.

    மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையே வருகிற வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஆஜராகுமாறு விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ×