அண்ணன் திட்டியதால் தங்கை தற்கொலை

ஜெயஸ்ரீ பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார். டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார்.
அண்ணன் திட்டியதால் தங்கை தற்கொலை
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. மழவராயனூர் கிராமத்தைச் ேசர்ந்தவர் யேசுடையான் மகள் ஜெயஸ்ரீ (வயது 16). திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார். 

இந்நிலையில் வீட்டில் ஜெயஸ்ரீயின் அண்ணன் சமையல் செய்யவில்லை என ஜெயஸ்ரீயை திட்டினார். இதனால் மனம் உளைச்சலில் இருந்த இவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கீேழ விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவாக்ள் ஜெயஸ்ரீயை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com