அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பழனி பாராட்டு

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை கலெக்டர் பழனி பாராட்டினார்.புத்தகப் பையினை பரிசாக வழங்கினார்.
அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பழனி பாராட்டு
Published on

விழுப்புரம்:

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக இல்லங்களில் தங்கி 10-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்து அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை மாவட்ட கலெக்டர் பழனி பாராட்டி புத்தகப் பையினை பரிசாக வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கே.ஜி பார்கவி,பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com