என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே திருமணம் நின்றதால் வாலிபர் தற்கொலை

- மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
- பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். விவசாயம் செய்து வருகிறார்.
இவருடைய 2-வது மகன் பூபாலன் (வயது 31). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சேத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென திருமணம் நின்று போனது.
இதனால் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 11 மணி அளவில் பூபாலன் அதிக அளவில் வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் இதற்கான காரணத்தை கேட்டுள்ளனர்.
உடனே பூபாலன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூபாலன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.