என் மலர்tooltip icon

    வேலூர்

    • வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    1.4.2018 முதல் 30.6.2018 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள (மாற்றுத்தி றனாளி ஓராண்டு முடிவு பெற்றுள்ள) பட்டப்படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் பள்ளி இறுதித்தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாகப் பள்ளியில் 9-வது வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் 10-வது பள்ளியிறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புக் காலாண்டிற்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்களை வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தினை www.tnvelaivaaippu.gov.in, https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீயமயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலைநாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.

    வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்
    • கலெக்டர் உத்தரவிட்டார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்தவர் மணி (வயது 24).

    தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    ஒரு வழக்கு சம்பந்தமாக மணி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). கள்ளச்சாராய வியாபாரி.

    இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். வேலூர் தாலுகா போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    பரிந்துரையை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இருவரிடமும் குண்டர் சட்டத்தில் கைதான நகலை ஜெயிலில் உள்ள மணி, ராஜ்குமார் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.

    • வருகிற 12-ந் தேதி நடக்கிறது
    • 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    அரசு திருமகள் ஆலை கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    இதில் கணிதம், பொருளியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு கல்லூரியிலேயே வருகிற 10 மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நேரடியாக விண்ணப்பம் வழங்கப்படும்.நேரடியாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதி சேர்க்கை நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பறவைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் கோட்ட வனத்துறை சார்பில் குடியாத்தம், பேரணா ம்பட்டு வனச்சரகம், குடியாத்தம் சமூகக்காடுகள் சரகம் ஆகியவற்றின் சார்பில் குடியாத்தத்தில் மனித வனம் உயிரின முரண்பாடு தவிர்த்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வனச்சரக அலுவலர்கள் வினோபா, சதீஷ்குமார், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் உதவி வனப்பாது காவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி 'மனித வன உயிரின முரண்பாடு தவிர்த்தல்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    அப்போது வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவைகளை பாதுகாப்பது குறித்தும், வனவிலங்குகள் மற்றும் பறவைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியில் வனவர்கள் மாசிலாமணி, சதீஷ்குமார், இளையராஜா, சரவணன், தயாளன் உள்பட குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கிராம வனக்குழுக்களை சேர்ந்தவர்கள், விவசாயிகள், வனத்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்
    • முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடவடிக்கை

    வேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் மரக்கன்றுகள் நட வேண்டுமென கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், குடியாத்தம், அமிர்தி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இன்று ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது.
    • பைக்கில் வந்த வாலிபர்கள் லாரியை விரட்டி சென்றனர். தக்காளி விலை அதிகமாக உள்ளது.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர்.

    20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 2200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெளிச்சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ, 2 கிலோ வாங்கிய காலம் போய் கால் கிலோ, அரை கிலோ வாங்க வேண்டிய சூழல் வந்துள்ளது.

    மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னி மற்றும் தக்காளி சாதம் உள்ளிட்ட உணவு வவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேலூரில் தக்காளி விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால், பைக்கில் சென்ற 2 பேர் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரியில் இருந்தவரிடம் தக்காளி கொஞ்சம் கொடுங்கள், என கேட்டு கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது.

    அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்கள் லாரியை விரட்டி சென்றனர். தக்காளி விலை அதிகமாக உள்ளது.

    தக்காளி கொஞ்சம் போடுங்க ப்ளீஸ் என கேட்டதும் லாரியில் இருந்த நபர் தக்காளிகளை பைக்கில் வந்த வாலிபர்களிடம் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீசினார்.

    அந்த தக்காளியை பைக்கில் சென்ற வாலிபர்கள் பத்திரமாக கேட்ச் பிடித்து, பின்னால் அமர்ந்து வந்தவரிடம் கொடுத்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் என்னய்யா இது தக்காளிக்கு வந்த சோதனை பார்த்தாயா? என நினைத்து சிரித்தனர்.




    • மகளிர் போலீசில் புகார்
    • வேலூர் சிறையில் அடைத்தனர்

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

    காட்பாடி அடுத்த சேவூர் சத்தியபுரத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 19) சிறுமி தனியாக இருப்பதை அறிந்தார்.

    சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது தனியாக இருந்த சிறுமியை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    இதனால் பயந்து போன சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • 25 பேர் கைது
    • தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

    வேலூர்:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த மேல் முறையிட்டு வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனைக் கண்டித்து வேலூர் காங்கிரசார் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் இன்று அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 25 பேரை இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன் பேபி மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    மறியல் போராட்டத்தில் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் சித்தரஞ்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித் பாஷா, மண்டல தலைவர்கள் ரகு, மனோகரன், அசோக் குமார் முகமது அலி ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் ரூ 6000 கோடி வசூல் செய்தனர்
    • முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

    அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தமிழகம் முழுவதும் ரூ 6000 கோடி வசூல் செய்தனர். பின்னர் நிதி நிறுவன அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் வேலூரில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களில் வருவான ஒருவரான ஜனார்த்தனன் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை 9 மணி முதல் சோதனை நடத்தினர் வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் ஜனார்த்தனன் தாத்தா பக்தவச்சலம் வீடு, வேலப்பாடியில் உள்ள உறவினர் நடராஜன் வீட்டிலும், காட்பாடி அடுத்த செங்குட்டையில் உள்ள சிஎம் ஜான் தெருவில் உள்ள ஜனார்தனின் மாமனார் வீட்டிலும் டெல்லி மற்றும் சென்னை சேர்ந்த அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த குழுவில் ஒரு வங்கி அதிகாரி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர் இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

    14 மணி நேரம்

    வேலப்பாடியில் உள்ள நகைக்கடையில் இரவு 11 மணி வரை அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 14 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    அமலாக்க துறை அதிகாரிகள் ஐ.எப்.எஸ்.நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டசம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சில நாட்களாக மன வேதனையில் இருந்தார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்து பின்னதுரை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ரகு (வயது 29), கட்டிட தொழில் செய்து வந்தார்.

    இவருக்கும் கீழ் கொத்தூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சினேகாவுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மனைவி சினேகா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை ரகு மனைவியை வீட்டுக்கு அவர் வரவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ரகு மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலை 10 மணி அளவில் ரகு, அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரகுவின் உறவினர்கள் பலவேறு இடங்களில் அவரைதேடினர்.

    இந்த நிலையில் மடையப்பட்டு அருகே உள்ள கருத்த மலை காப்புக்காட்டு பகுதி யில் உள்ள கசிவுநீர் குட்டை அருகே மர்மமான முறையில் ரகு இறந்து கிடந்ததை அந்த வழியாகசென்றவர்கள் பார்த் துள்ளனர்.

    இது குறித்து தக வல் கிடைத்ததும் வேப்பங் குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ரகுவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
    • வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும்  உள்ளனர்.

    வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.

    ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 பவுன் நகைக்காக அவரது காதை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    வளர்மதியை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்து அறுத்து கொலை செய்தனர்.

    ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். மாலை 4 மணிக்கு அந்த வழியாக சென்ற மலர் என்ற பெண் வளர்மதியின் பிணத்தைப் பார்த்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி பொறுப்பு இருதயராஜ் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவ இடத்திற்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா சம்பவ இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக கானாற்றில் உள்ள கிணறு வரை 2 கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடவியல் நிபுணர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வளர்மதியின் பிணைத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வளர்மதியின் கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வளர்மதியின் உறவினர்கள் மற்றும் சாத்கர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது.
    • வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் கோலிசோடா தயாரித்து முதன் முதலில் விற்பனை செய்ய விரும்பினார்.

    வேலூர்:

    தமிழ்நாட்டில் 1980-களில் குளிர்பானம் என்றதும்நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும்பெட்டிக் கடை அல்லது பலசரக்கு கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தருவார்கள்.

    அதன் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது. குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா மவுசு குறையவில்லை.

    தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது.

    வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அந்த காலத்திலேயே பலவிதமான குளிர்பானங்களை பருகத் தொடங்கினர்.

    வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் கோலிசோடா தயாரித்து முதன் முதலில் விற்பனை செய்ய விரும்பினார்.

    இதற்காக ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில் இறக்குமதி செய்தார். 1924-ம் ஆண்டு முதன் முதலில் கோலி சோடாவை அவர் தயாரித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் சிறிய பெட்டி கடைகளுக்கு கோலி சோடா சப்ளை செய்யப்பட்டது.

    அந்த காலத்தில் சென்னை பெங்களூர் சாலையில் பயணம் செய்தவர்கள் வழியில் உள்ள கிராமங்களில் கோலி சோடா குடித்திருப்பதை மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கோலி சோடா வேலூரில் பிரபலமாக இருந்தது.

    முதன் முதலில் தயார் செய்யப்பட்ட கோலி சோடா பாட்டில் இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பனியில் அவரது தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டுள்ளது.

    தற்போது பழம் புளூபெர்ரி கோலா எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பச்சை என பலவிதமான கோலி சோடாக்களை தயார் செய்து வருகின்றனர்.இங்கிருந்து வட மாவட்டங்கள் முழுவதும் இவர்கள் கோலிலசோடா விற்பனையை விரிவுபடுத்தி உள்ளனர்.

    கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட கோலி சோடா 100-வது ஆண்டை எட்டி வருகிறது.

    இதுகுறித்து சோடா கம்பெனி உரிமையாளர்கள் கூறுகையில்:-

    கண்ணுசாமி முதலியார் சோடா கம்பனி தொடங்கிய போது உள்ளூரில் விற்பனை அதிகரித்தது. சுதந்திரத்திற்கு பிறகு கோலி சோடா விற்பனை மேலும் அதிகரித்தது .அந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்து பாட்டில்களை இறக்குமதி செய்தோம்.

    தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பாட்டில்கள் கொண்டு வந்து சோடா தயாரித்து வருகிறோம். 1990-ம் ஆண்டு முற்பகுதி வரை சோடா விற்பனை அதிகமாக இருந்தது. அதற்கு பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் வந்ததால் ஓரளவு விற்பனை குறைந்தது.

    2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என பொதுமக்களிடையே ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக 2017-ம் ஆண்டுக்கு பிறகு கோலி சோடா விற்பனை புதிய உத்வேகத்தை ஏற்படுத்திவிட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×