என் மலர்
நீங்கள் தேடியது "A thousand saplings"
- கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்
- முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடவடிக்கை
வேலூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் மரக்கன்றுகள் நட வேண்டுமென கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், குடியாத்தம், அமிர்தி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இன்று ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






